Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஜூலை, 2019

சுப்ரமணிய பாரதி

 Image result for சுப்ரமணிய பாரதி 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையையே வாழ்க்கையாக உடையோன்
வாழ்க்கையே கவிதையாக செய்தோன்
அவனே கவி !!
இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

நெருங்கின பொருள் கைபட வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

வட்ட கரிய விழியில் கண்ணம்மா
வானக் கருணைக் கொள்.
இந்த வரிகளையெல்லாம் எங்கோ சினிமாவில் கேட்டது போல் உள்ளதா?

இவ்வரிகள் எல்லாம் சினிமாவில் வந்துவிட்டதால் அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது. இந்த வரிகளுக்கெல்லாம் சொந்தக்காரர் யார்?

மக்கள் மனதில் இன்றுவரை வேறூன்றி நிற்கும் புகழ்பெற்ற கவிஞர்...!!

பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு தனது பேனா மூலம் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளர்.

பெண் அடிமைத்தனம் ஜாதி கொடுமைகள் போன்றவற்றிற்கு இறுதிவரை எதிர்த்து நின்றவர்.
இவர் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் அனல் தெறிக்கும் விடுதலைப்போரை கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை வேறூன்றச் செய்தவர்.

இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவரும் கூட.

இவர் பல மொழிகளை கற்றிருந்தாலும் தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்டவர். 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று போற்றி பாடியுள்ளார்.

விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் 'தேசிய கவியாக" போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரர்.

யார் என கண்டுபிடித்துவிட்டீர்களா? அவர்தான்

தேசிய கவி

முண்டாசுக் கவி

மீசை கவிஞன்

என போற்றப்படும்

'சுப்ரமணிய பாரதி"
பாரதியார் பாடல்கள் மற்றும் நாவல்கள் மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவருடைய 5 வயதில் தாயார் காலமானார். பாரதியார் இளம்வயதிலேயே தமிழில் புலமைப்பெற்று திகழ்ந்தார்.

இளமைப்பருவம் :

சிறுவயதிலேயே பாரதியாருக்கு தமிழ்மொழி மீது மிகுந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுத தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிப்பாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.

இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு 'பாரதி" என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் 'சுப்பிரமணிய பாரதியார்" என அழைக்கப்பெற்றார்.

திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் ஆரம்பக்கல்வியை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞர்களோடும், பண்டிதர்களோடும் சொற்போரில் சுதந்திரமாக ஈடுபட்டார். இதனால் இவரின் தமிழ்புலமை மேலும் அதிகரித்தது.

அன்றைய திருநெல்வேலியில் வசித்த பலர் இவரின் புலமையை கண்டு வியக்க துவங்கினர். ஆனால், பாரதியாரின் தந்தையோ, தனது மகன் தொழில்நுட்பத்துறையில் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும், கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்று கல்வி பயின்றார் பாரதியார்.

பாரதியாரின் திருமண வாழ்க்கை :

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும்போது 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி 14 வயது மட்டுமே நிறைவடைந்த அவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாவோடு திருமணம் நடந்தது. இதுபோன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று அவர் அப்போது எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை.

பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணத்திற்கு எதிராக பொங்கி எழுந்தார் மகாகவி பாரதியார். 'பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிரமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று பாடினார்.

பாரதியாரின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலையை நிறுவ விரும்பினார். அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும், உதிரிப்பாகங்களும் கடலில் மூழ்கி போனது. இதனால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்த கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப்பட்டு அவர் இறந்துப்போனார்.

அப்போது பாரதியாருக்கு வயது 16 தான். தந்தையின் மறைவிற்கு பிறகு பாரதியாரின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது. அதன்பின் காசிக்கு சென்று தனது அத்தையுடன் தங்கியிருந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும், இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார். அப்போதுதான் பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும், மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் எட்டையபுரம் வந்த பாரதியார் 1902ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்கு அரசவை கவிஞராக பணியாற்றினார்.

1904ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய 'தனிமை இரக்கம்" என்ற பாடல் 'விவேகபானு" இதழில் வெளியானது. வாழ்நாள் முழுவதும் பல்வேறு காலக்கட்டங்களில் இதழாசிரியராகவும், மதுரையில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதியார் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களையும் மொழிப்பெயர்க்கவும் செய்தார்.

இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான், 'யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தெளிவாக சொன்னார் மகாகவி பாரதியார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் பாரதியார் ஆற்றிய பணி :

தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார் மகாகவி பாரதியார். அதன்பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

பின் கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகாசபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிகா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசிப்பெற்ற பாரதியார், அவரை தம் ஞான குருவாக ஏற்றுக்கொண்டார்.

1906ல் சென்னையிலிருந்து 'இந்தியா" என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன்மூலம் தனது அரசியல் கருத்துக்களை நாட்டு மக்களிடம் பரப்பினார். 1907ஆம் ஆண்டில் 'பால பாரதம்" என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பாரதியார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபட துவங்கினார். தான் ஆசிரியராக இருந்த இந்தியா என்னும் பத்திரிக்கையை விடுதலைக்காக பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ள செய்தது.

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும்யாரும் சேருவீர்...!!
என்று நெருப்பு கனலாய் கொந்தளித்தார் மகாகவி பாரதியார்.

சூரத் காங்கிரஸில் தீவிரவாதிகளுக்கும், மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் 1907ல் பிளவு ஏற்பட்டது. அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரை சந்தித்தார் பாரதியார்.

கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர், பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சுதேச கீதங்கள்" என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.

1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்" சென்னையிலும், தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்" என்ற தலைப்பில் கவிதை தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.
பாரதியாரின் சுதந்திர எழுச்சிமிக்க பாடல்களும், கேலி சித்திரங்களும் சுதந்திர போராட்டத்திற்கு கைக்கொடுத்து வழிநடத்தியது. இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா" பத்திரிக்கையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதனால் தன் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்தார் பாரதியார்.

அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம் போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைகளை எழுதினார். அதோடு 1912ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார் பாரதியார்.

பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையை தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார். பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது.

இதனால் சென்னையில் பிறந்து புதுவையில் வளர்ந்த 'இந்தியா" பத்திரிக்கையும் பாதை அறியாது பாதியில் நின்றது. புதுவையில் பாரதியாரின் பத்திரிக்கை முடங்கியதே தவிர பாரதியாரின் புலமை முடங்கவில்லை.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக