இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மிகவும் சுவாரஸ்யமான கடவுள்களில்
ஒருவர் தான் சிவன். நாம் இந்தியா என்று எடுத்துக் கொண்டால் பொதுவாக சிவாலயங்கள்
அனைத்தும் வித்தியாசமான இடங்களில் தான் காணப்படுகின்றன.
அந்த வரிசையில் புகழ்பெற்ற அமர்நாத்
மற்றும் கேதார்நாத் கோவில்கள் கூட எளிதில் அணுக முடியாதவைகளாகும். ஆனால், நாம்
தற்போது பார்க்கவிருக்கும் இந்தக்கோவில் ஏழு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில்
சிவபெருமானின் ஒரு சுவாரஸ்யமான கோவிலாக உள்ளது. ஆம், குர்நூலில் உள்ள சங்கமேஷ்வரா
கோவில் பற்றி தான் பார்க்க போகிறோம்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள குர்நூல்
என்னும் மாவட்டத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கிருஷ்ணா, பாவநாசி, வேணி,
துங்கபத்ரா உள்ளிட்ட ஏழு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின்
சிவலிங்கத்தை பாண்டவர்களில் ஒருவரான தர்மன் நிர்மானித்தார் என்று கூறப்படுகிறது.
நீரில்
மூழ்கிய சங்கமேஷ்வரர் கோவில் :
1980ஆம் ஆண்டு ஸ்ரீசைலம் அணை
கட்டப்பட்ட பின்னர் சங்கமேஷ்வரர் கோவில் நீரில் மூழ்கியது. சங்கமேஸ்வரர் கோவில்
இந்த இடத்திலுள்ள மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் மாறுபட்டு அமைந்துள்ளது.
கோடை காலத்தில் நீரின் அளவு குறைவாக
இருக்கும் சில நாட்களுக்கு மட்டும் கோவில் காணப்படுகிறது. இந்த நாட்களில் கோவில்
பொது மக்களுக்கு திறக்கப்படுகிறது. 2003ஆம் ஆண்டு முதல், கோடை மாதங்களில் கோவில் ஒவ்வொரு
வருடமும் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவில் ஏப்ரல் முதல் மே மாதம் வரை
40 முதல் 50 நாட்களுக்கு திறந்திருக்கும். கோவில் தண்ணீரால் சூழப்பட்ட போது
படகுகளில் சென்று மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சன்னதிக்கு உள்ளே உள்ள மர
லிங்கத்திற்கு பல பூஜைகள் மற்றும் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக