இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

நீதிபதிகளை " மை லார்ட் அல்லது யுவர் லார்ட் ஷிப்" என்றழைக்கும் பிரிட்டிஷ் கால முறையை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நீக்க உள்ளது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைக் கூட்டத்தை நீதிபதிகள் நடத்தினர். அந்த கூட்டத்தில் இந்திய அரசியலமைப்பின் சமத்துவத்தை போற்றும் வகையில் நீதிபதிகள் முன்பு உரையாற்றுபவர்கள் “மை லார்டு , யுவர் லார்டுஷிப்” ( My Lord, Your Lordship ) போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி நீதிபதிகளை அழைக்க பயன்படும் இதுபோன்ற வார்த்தைகள் விரைவில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இருந்து நீக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட்டின் சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்த தீர்மானம் நிறைவேறியுள்ளது. அவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்த போது, ‘மை லார்டு’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று வழக்கறிஞர்களை கேட்டு கொண்டவர் ஆவார்.

முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துருவும், “யுவர் லார்ட்ஷிப்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்தார். அதேபோல் 2014-ம் ஆண்டு, நீதிபதிகள் ஹெச்.எல். டட்டூ, எஸ்.ஏ. போப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபதிகளை மரியாதைக்குரிய முறையில் நடத்தினால் போதும், “ மை லார்ட், யுவர் லார்ட்ஷிப்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தது. நீதிபதிகளை சர் என்று அழைப்பது கட்டாயம் என்று கடந்த 2016-ல் இந்திய பார் கவுன்சில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...