Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

100 MP கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோன்..! அறிமுகப்படுத்துகிறது ஜியோமி

100 MP கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோன்..!  அறிமுகப்படுத்துகிறது ஜியோமி

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 


100 மெகாபிக்சல் கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோமி அடுத்த வெளியீடாக 64 மெகாபிக்சல் கேமிரா கொண்ட ஸ்மார்ட்ஃபோனை வெளியிடுகிறது. ரெட்மி ப்ராண்ட்-ன் கீழ் இந்தப் புதிய ஸ்மார்ட்ஃபோன் வெளியாக உள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் இப்புதிய ஃபோன் வெளியாகும் என்றும் ஜியோமி அறிவித்துள்ளது.

அடுத்ததாக 100 மெகாபிக்சல் கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோனை எம்.ஐ ப்ராண்ட்-ன் கீழ் வெளியிடுகிறது ஜியோமி. இதனுடன் 108 மெகாபிக்சல் உடனான சாம்சங் ISOCELL சென்சார் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்ஃபோன் வெளியாக உள்ளது. இந்த ஃபோன் குறித்த விரிவான தகவல்கள் எதையும் தற்போதைய சூழலில் ஜியோமி வெளியிடவில்லை.

ஆனால், அடுத்த வெளியீடாக வர உள்ள 64 மெகாபிக்சல் கேமிரா உடனான ஃபோன் சாம்சங் சென்சார் பயன்படுத்துகிறதா என்பது குறித்தத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சாம்சங் சார்பில் இந்த ISOCELL ப்ரைட் GW1 சென்சார் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரெட்மியைத் தொடர்ந்து ரியல்மி நிறுவனமும் தனது 64 மெகாபிக்சல் கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோனை வெளியிடுகிறது. இப்புதிய ஃபோன் ரியல்மி 5 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!