இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வருடக்கணக்கில் தொடர்ந்து வரும் அங்காளி பங்காளி
சண்டையால், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தொடர்ந்து நாளுக்கு நாள் விரிசல்
அதிகமாகிக் கொண்டே செல்லும் இந்த நிலையில், இந்த இரு நாடுகளிலும் உள்ள
நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சீனாவின் ஸ்மார்ட்போன்
ஜாம்பவானான ஹூவாய் நிறுவனம், அமெரிக்காவின் தொழில் நுட்பங்களை, சட்ட விரோதமாக சீனா
நிறுவனங்கள் சட்ட விரோதமாக வேவு பார்ப்பதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்காவில் தடை
செய்யப்பட்டன. .
இந்த நிலையிலேயே அமெரிக்கா அரசும்
ஹூவாய் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹூவாய்க்கு
வருவாய் வீழ்ச்சி
என்னதான் மீசையில் மண் ஒட்டவில்லை
என்றும் கூறப்பட்டாலும், அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை குறிப்பிடத்தக்க அளவு
செயல்படுத்தியிருந்த ஹூவாய்க்கு இது பெருத்த அடியாக கூறப்படுகிறது. அதிலும் ஸ்மார்ட்போன்
பிரிவில் பெருத்த அடியாகவே தற்போது இருந்து வருகிறது என்றும் கூறியுள்ள்து. ஆக
இதன் அடிப்படையில் இந்த நிறுவனம் தற்போது, 10 பில்லியன் டாலர் அளவுக்கு மேல், தனது
ஸ்மார்ட்போன் பிரிவில் வருவாயில் குறைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.
ஹூவாயில்
வர்த்தகம் பாதிப்பு
இந்த நிலையில் உலகின் இரண்டாவது பெரிய
ஜாம்பவான் ஆன இந்த நிறுவனம், அமெரிக்காவின் தடைக்கு பின்பு பெருத்த பின்னடைவை
சந்தித்துள்ளதாகவும், இந்த நிலையில் இந்திய மதிப்பில் கிட்டதட்ட 72,000 கோடிக்கு
மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிர்வாகம் கூறியுள்ளது. இது
குறித்து ஹூவாய் நிறுவனத்தின் தமைமை நிர்வாக அதிகாரி ரென் ஜெங்ஃபை கூறுகையில்,
நடப்பு 2019ம் நிதியாண்டில் கடந்த ஜூன் மாதத்தில் தடை செய்த நிலையில் இந்த
நிறுவனத்தின் வருவாய் 30 பில்லியன் டாலர் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்
கூறியுள்ளார்.
கை
கொடுக்கும் சொந்த தயாரிப்பு
ஹூவாய் நிறுவனத்தின் நுகர்வோர்
வணிகக்குழு, இதன் அத்தியாவசியமான கூகுள் ஆண்ட்ராய்டு குழுவிலிருந்து
அகற்றப்பட்டதிலிருந்து, தனது சொந்த இயக்க முறையை ஆரம்பித்துள்ளது, இது ஆரம்பத்தில்
இருந்ததைவிட தற்போது, மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறியுள்ளது. என்ன
இந்த நிறுவனத்தின் விற்பனை குறிப்பாக 10 பில்லியன் டாலர் அளவுக்கு குறையக் கூடும்
என்றும் ஹூவாய் கூறியுள்ளது. மேலும் கடந்த 2018ல் இந்த நிறுவனம், CNY 349 பில்லியன்
வருவாய் ஈட்டியிருந்ததாகவும் கூறியுள்ளது.
உள்நாட்டில்
ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு
இந்த நிலையில் விளம்பரங்கள் மற்றும்
தேசபக்தி கொள்முதல் ஆகியவற்றால் தூண்டப்பட்ட, சீனாவில் ஹூவாய் நிறுவனத்தின்
ஸ்மார்ட் போன் விற்பனை ஒரு வருடத்துக்கு முன்பு ஒப்பிடும்போது, ஜூன் காலாண்டில்
அதிகபட்சமாக மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளது. இது உலக சந்தையில் நிலவி வரும் ஏற்றுமதி
சரிவை ஈடுகட்ட உதவியுள்ளது என்றும், இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் நுகர்வோர்
வணிகக் குழு , 2019ம் ஆண்டின் முதல் பாதியில் இதன் வருவாய் CNY 221 பில்லியனை
ஈட்டியுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஹூவாயின்
பொருட்களுக்கு அமெரிக்காவில் தடை
ஹூவாய் நீறுவனத்திற்கு ஒரு தற்காலிக
நிவாரணத்தை வழங்கிய அமெரிக்கா, இது 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும்
கூறியிருந்தது. அதே சமயம் அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஹூவாயின்
பொருட்களை அமெரிக்கா தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது
குறித்து கூறியுள்ள ஹூவாய் நிறுவனம், மேலும் வெளி நாடுகளின் தேவையை நம்பி
இருக்காமல், தற்போது இந்த நிறுவனம் சொந்த மாக தயாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளது. இது உண்மைதானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக