Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

பலத்த மழை காரணமாக ஆக., 11 வரை விமான சேவைகள் ரத்து!

பலத்த மழை காரணமாக ஆக., 11 வரை விமான சேவைகள் ரத்து!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

கேரளாவில் தீவிரமடைந்து வரும் பருவமழை காரணமாக விமான சேவைகள் வரும் ஆகஸ்ட் 11, வரை நிறுத்திவைக்கப்படுகிறது!
கேரளாவில் கடந்த சில தினங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாடைந்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்பரப்பு மோசமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் திருசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர் மற்றும் காசர்கோட் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கேரளாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையின் மத்தியில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பேரழிவை ஏற்படுத்தி வரும் தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது சுற்றுக்கு கேரளா தற்போது பலியாடாக மாறியுள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.

இதற்கிடையில் முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை இரவு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் மாநிலத்தில் வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்தார். இதுவரை 22,165 பேர் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 315 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் பினராயி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் மகாராஷ்டிராவிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மகாராஷ்டிராவின் மூன்று மாவட்டங்களான கோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சாலையை ஆக்ரமித்துள்ள வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!