இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடந்த வாரம் நடைபெற்ற டெல்லி வங்கியாளர் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. ஓடிபி பாஸ்வேடு பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கியுள்ளது.
ஹைலைட்ஸ்
- ஏடிஎம் மோசடிகள் நள்ளிரவிலோ விடிவதற்கு முன்போ நிகழ்கின்றன.
- பணம் எடுக்க 6 - 12 மணிநேர இடைவேளையை கட்டயாமாக்க பரிந்துரை.
ஏடிஎம்
மூலம் ஒரு முறை பணம் எடுத்துவிட்டு, 12 மணிநேர இடைவேளைக்குப் பின்பே மீண்டும் பணம்
எடுக்க முடியும் என்ற விதிமுறையை அமல்படுத்துமாறு டெல்லி வங்கியாளர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
அதிகரித்துவரும் ஏடிஎம் மோசடிகளைத் தவிர்க்கும் நோக்கில் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க 6 முதல் 12 மணிநேரம் இடைவெளியைக் கட்டாயமாக்க வேண்டும் என அந்தக் குழு நிதி சேவைகள் அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.
ஏடிஎம் மோசடிகள் பல இரவு நேரத்தில் நடக்கின்றன. குறிப்பாக நள்ளிரவிலோ விடிவதற்கு முன்போ நிகழ்கின்றன. எனவே, ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு இடையே குறிப்பிட்ட கால இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதி மோசடிகளைத் தவிர்க்க உதவியாக இருக்கும் என டெல்லி வங்கியாளர் குழுவின் உறுப்பினரும் ஓரியண்டல் பேங்க் தலைமைச் செயல் அதிகாரியுமான முகேஷ் குமார் ஜெயின் தெரிவிக்கிறார்.
இந்தத் திட்டம் குறித்து கடந்த வாரம் நடைபெற்ற டெல்லி வங்கியாளர் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதில் 18 வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ஓடிபி பாஸ்வேடு பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட இன்னும் சில பரிந்துரைகளையும் இந்தக் குழு வழங்கியுள்ளது. இதனிடையே, ஒரு நாளில் 10,000 ரூபாயக்கு மேல் பணம் எடுக்கு ஓடிபி பாஸ்வேட் கட்டாயம் என கனரா வங்கி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2018-19ஆம் ஆண்டில் 980 ஏடிஎம் மோசடிகள் நடந்திருக்கின்றன. முந்தைய ஆண்டில் 911 மோசடிகளை பதிவான நிலையில், ஓராண்டுக்குள் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகியுள்ளது.
டெல்லியில் 179 ஏடிஎம் மோசடிகள் பற்றிய புகார்கள் பதிவு செய்யப்புள்ளனர். இது நாட்டிலேயே இரண்டாவது அதிகபட்சமாகும். மகாராஷ்டிராவில் மிக அதிக எண்ணிக்கையாக, 233 ஏடிஎம் மோசடிகள் நடத்துள்ளன.
கடந்த சில மாதங்களாக போலி ஏடிஎம் கார்டு மூலம் மோசடி நடப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த வழியில் நடக்கும் மோசடியில் வெளிநாட்டின் தொடர்பு நிறைய இருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
மோசடியில் இருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக இந்த இடைவேளை பரிந்துரைக்கப்படுகிறது. இது அமலுக்கு வந்தால் மின்னணு முறையில் பரிவர்த்தனை செய்யும் வழக்கத்தை அதிகப்படுத்தவும் கைகொடுக்கும். ஆனால், டிஜிட்டல் வழிமுறைக்கு மாறாதவர்கள், அவசரத் தேவைக்காக பணம் எடுக்க வேண்டியிருந்தால், அவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக