இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
டின்டர் டேட்டிங் ஆப்பில் 14 ஆயிரம்
பெண்களுடன் மேட்ச் ஆன ஒருவர் அதில் பெண் கூட செட் ஆகாத கொடுமை!
டேட்டிங்க் எனப்படும் குறைகால
காதலர்களை தேடும் செயலுக்கு உலக அளவில் பல அமோக வலைதளங்கள் இயங்கி வருகின்றது.
குறிப்பாக டின்டர், பம்பல் போன்றவை இதற்காகவே தனித்து தீவிரமாக செயல்பட்டு
வருகிறது. தற்போதைய இளைஞர்களிடம் டேட்டிங் செயலி இல்லை என்றால் நாம் ஆச்சரியப்படும்
அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதில், ஆண்களும் பெண்களும் தங்களுக்கு
பிடித்தவர்களைத் தேர்வு செய்து டேட்டிங் செய்யலாம். இந்நிலையில், "மிஸ்டர்
டின்டர்" என பெயர் வாங்கும் அளவிற்கு ஸ்டேபன் பைரே டோம்லின் என்ற மாடல்
ஒருவரின் டின்டர் கணக்கில் 14 ஆயிரத்திற்கும் அதிகமாகப் பெண்கள் மேட்ச்
ஆகியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தினமும் குறைந்தது 20
மேட்ச்களையாவது பெற்றுவந்துள்ளார் இவர். தற்போது 14 ஆயிரம் மேட்ச்களையும் தாண்டி
சென்றாலும் அவருக்கு அங்கு எந்த லவ்வும் செட் ஆகவில்லை. இவர் ஏற்கனவே செலிப்ஸ் கோ
டேட்டிங் என்ற டிவி ஷோவில் கலந்து கொண்டவர். அப்பொழுது இவரது லுக் மற்றும்
உடற்கட்டிற்காக மிக பிரபலமானவர் அதன் காரணமாகவே இவருக்கு இத்தனை மேட்ச்கள்
கிடைத்துள்ளது.
இவர் இந்த 14 ஆயிரம் பேரில் 2 பேருடன்
தான் டேட்டிங் செய்ததாகவும் ஆனால் அது அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை எனவும்
ஏற்கனேவ ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு
நிகழ்ச்சியில் நடாஷா என்ற பெண்ணை பார்த்துள்ளார். முதல் முறை பார்த்தபோது இவருக்கு
மனதில் பற்றிக்கொண்டது.
பின்பு அவரிடம் பேசி பழகி அவருடன் சில
மாதம் டேட்டிங் செய்துள்ளார். அவர்களிடையே நன்றாக செட்டாகிவிட்டதால் அவர்கள்
தற்போது ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தகவலை ஸ்டேபனே தெரிவித்துள்ளார். இந்நிலையில்
தற்போது இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளனர். அதில்
அவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் முக்கியமான விஷயங்களை வீலாக் வீடியோவாக பதிவு
செய்து அதை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.
டேட்டிங் ஆப்பில் 14 ஆயிரம் பெண்கள்
மேட்ச் ஆகியும் அதில் யாரும் செட் ஆகாமல் வெளியில் ஒரு பெண்ணுடன் காதல் கொண்டது
பலரை வியக்க வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக