இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இருசக்கர வாகன பார்சல்
அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
ரயில்வேக்கு சொந்தமான இந்த அலுவலக கட்டிடம் இன்று காலை 3.30 மணி அளவில் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை ரயில்வே போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்டனர். மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் 5 தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த பவிழம் மணி
இதில் இடிபாடுகளில் சிக்கிய ஒப்பந்த பணியாளர்கள் பவிழமணி, இப்ராகிம் மற்றும் வடமாநில தொழிலாளி ஆகிய 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக