இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கார்,
ஆட்டோ, மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து ஏர் கண்டிஷனிங் வசதியுடன் கூடிய பேருந்து
சேவையை இந்தியாவில் Uber நிறுவனம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச்
சேர்ந்த Uber நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் இது
தொடர்பாக கூறுகையில், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்று
இந்தியாவில் அடுத்த 12 மாதங்களுக்குள் ஏசி பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும்
இதற்காக பொதுமக்களின் வேலைநிமித்தமான போக்குவரத்து நிரம்பிய வழித்தடங்கள்
ஏற்கெனவே கண்டறியப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இந்த
பேருந்துகளில் பயணிகள் தங்களின் இருக்கையை தியேட்டர்களில் தேர்ந்தெடுக்கப்பது
போன்றே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
6
ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் கால்பதித்த உபர் நிறுவனம், ஆரம்பத்தில்
அதிகளவிலான சலுகைகளை வாரி வழங்கியது. தற்போது வழக்கமான கட்டணங்களையே வசூலித்து
வருகிறது.
இது
போன்ற பேருந்து சேவை இந்தியாவுக்கு புதுமை இல்லை, முன்னதாக கடந்த 2015ல் இது போன்ற
சேவையை ஓலா நிறுவனம் டெல்லி, தேசிய தலைநகர் பகுதி, ஹைதராபாத் போன்ற நகரங்களில்
Shuttle என்ற பெயரில் இயக்கி வந்தது. இந்த முயற்சியில் ஓலா நிறுவனம் வெற்றி பெறாத
நிலையில் தற்போது உபர் நிறுவனம் இதில் களமிறங்க உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக