இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தமிழ்நாட்டில்
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில் வாக்காளர் அட்டையில் உள்ள
பிழை களை திருத்தம் செய்வதற்காக வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை நாடு முழுவதும் வரும்
16 ஆம் தேதி முதல் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா
சாகு, வரும் 16ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும் வாக்காளர்
சரிபார்ப்பு திட்டத்தின் மூலம் வாக்காளர் அட்டையில் புகைப்படம், பிறந்த தேதி,
முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றை வாக்காளர்கள் மேற்கொள்ள முடியும் என்றார்.
1950 என்ற வாக்காளர் உதவி மைய தொலைபேசி எண், NVSP இணையதளம் மற்றும் அரசு இசேவை
மூலம் இந்த பணிகளை வாக்காளர் கள் மேற்கொள்ள முடியும் என்றும், இதற்காக பிரத்யேக
செயலியை தேர்தல் ஆணையம் விரை வில் வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த
மாற்றங்கள் செய்து புதிய வாக்காளர் அட்டை பெற 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்
என்றும், புதிய வாக்காளர்கள் மட்டும் கட்டணமில்லாமல் புதிய வாக்காளர் அட்டை
வழங்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
வாக்காளர்
சரிபார்ப்பு திட்டத்தின்போது வாக்காளர்களின் மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரி
பெறப்படவுள்ளதால், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படும்போதோ, சேர்க்கப்படும்
போதோ அதன் விவரம் சம்பந்தபட்ட நபரின் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்
என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ள
வாக்குப்பதிவு மையங் களை ஆய்வு செய்து, கூடுதல் மையங்கள் தேவைபடுகிறதா அவ்வாறு
இருப்பின் அவற்றை உருவாக்குவது, பூத் சிலிப்பு வழங்கும் பணிகளை மேம்படுத்துவது
உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும்,
வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாகவும்,
அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதலுக்கான சிறப்பு
முகாம்களுக் கான தேதி அறிவிக்கப்பட்டு, வரும் ஜனவரியில் புதிய இறுதி வாக்காளர்
பட்டியல் வெளியிடப்படும் என்றும் சத்யபிரதாசாகு தெரிவித்தார். வேலூர் மாவட்டம்
வாணியம்பாடியில் பண பட்டுவாடா செய்ததாக கூறி அதிமுகவினரை திமுகவினர் பூட்டு போட்டு
பூட்டி வைத்தையும், அமைச்சர் முன்னிலையில் அவரது உதவியாளர் பூட்டை உடைத்து
அதிமுகவினரை வெளியே அழைத்து வந்ததாக கூறப்படும் விவகாரத்தில் மாவட்ட தேர்தல்
அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக சாஹு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக