இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டு
அச்சடிப்பதை நிறுத்த ஆர்.பி.ஐ.. முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான
மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து
புழக்கத்திலிருந்த ரூ.1,000 , ரூ. 500 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு
புதிதாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தின.
இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக
புழக்கத்தில் இருந்து வந்த ரூ.2000- பணப்புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2017-18 நிதியாண்டின் போது 6,72,600 கோடி அளவிற்கு இருந்த இதன் எண்ணிக்கை
2018-19 ம் ஆண்டில் 6,58,200 ஆக குறைந்துள்ளது. சுமார் 14, 400 கோடி அளவிற்கு அதன்
எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் மதி்ப்பு
2018-ம் வருட நிதியாண்டில் 37 சதவீதத்தில் இருந்து 2019-ம் ஆண்டு நிதியாண்டில் 39
சதவீதமாக இருந்தது.மேலும் பல்வேறு மதிப்புள்ள நோட்டுகளின் மதிப்பு 43 சதவீத்தில்
இருந்து 51 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆர்.பி.ஐ., நடப்பு நிதியாண்டில்
ரூ. 2,000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. இதனால் 151 மில்லியன் அளவில் புழக்கத்தில் உள்ள ரூ.2,000
நோட்டுகளை 47 மில்லியன் அளவாக குறைத்துள்ளது. அதே நேரத்தில் 500 ரூபாய்
நோட்டுகளின் எண்ணிக்கையை 11,692 மில்லியனாக உள்ளது.
இதையடுத்து 2000 ரூபாய் அச்சடிக்கும் பணிகளை
ரிசர்வ் வங்கி நிறுத்தப் போவதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக