Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

காடுகளின் அழகு... ஆனைமலை புலிகள் காப்பகம்...!!

 Image result for ஆனைமலை புலிகள் காப்பகம்...!!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

காடுகளின் அழகை ரசித்து அனுபவிக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் தான் ஆனைமலை புலிகள் காப்பகம்.

நகரத்தின் இரைச்சலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த ஆனைமலை சரணாலயம் கோவை மாவட்டத்தில் உள்ளது.

கோவையிலிருந்து 110கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 16கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, அமராவதி, உடுமலை, பொள்ளாச்சி ஆகிய 6 வனச்சரகங்களை உள்ளடக்கியதுதான் இந்த ஆனைமலை புலிகள் காப்பகம்.

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சரணாலயம் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது.

1961ஆம் ஆண்டு வருகை புரிந்த அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் நினைவையொட்டி இந்த சரணாலயத்திற்கு இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் என பெயர் இடப்பட்டுள்ளது.

சிறப்புகள் :

கடல்மட்டத்தில் இருந்து சுமார் 2513 மீட்டர் உயரத்தில் 958 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

2000 வகையான மரங்களும், செடிகளும் இங்கு காணப்படுகின்றன. இதில் ஏராளமானவை மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச்செடிகள் ஆகும்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த சரணாலயம் யுனெஸ்காவின் பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனைமலையில் உள்ள கரிசன் சோழா என்னும் பகுதியை மூலிகை மருத்துவமனை என்றே செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர்.

அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, சோலையாறு போன்றவை இப்பகுதியை வளப்படுத்தும் ஆறுகளாகும்.

இந்த சரணாலயத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது. அழகிய பசுமை மாறாக்காடுகளைக் கொண்ட இந்த வனப்பகுதியில் தேக்கு மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இங்கு சிங்கவால் குரங்குகள் மற்றும் ஏராளமான மான் வகைகள் உள்ளன. அவற்றை நேரடியாக எளிதில் கண்டு ரசிக்கலாம்.

புலிகள், யானைகள், கரடி, நரி உள்ளிட்ட பல விலங்குகளும், பலவகையான அணில்களும் இந்த சரணாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இதுபோல 300க்கும் மேற்பட்ட பறவைகளும் வந்து செல்கின்றன.

எப்படி செல்வது?

கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளது.

இந்த அழகிய வனப்பகுதியை யானைசவாரி மூலமாக சுற்றிப்பார்க்கலாம். வேன் மூலமாகவும் காடுகளின் அழகை கண்டு ரசிக்கலாம்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

கோவை மற்றும் பொள்ளாச்சியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக