இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமெரிக்காவில்
உள்ள புளோரிடா நகரில் 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி சோண்ட்ரா பேட்டர் என்ற 68
வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டார்.இவர் வேலை செய்யும் கடையில் மர்மமான முறையில்
இறந்து கிடந்தார்.
இந்த
கொலையை யார் செய்தது என காவல் துறை பல வருடங்களாக தேடி வந்தனர்.கொலை செய்யப்பட்ட
இடத்தில் கிடந்த ஆதரங்களை மையமாக வைத்து கொண்டு காவல் துறை விசாரணை நடத்தி வந்து
உள்ளனர்.
சோண்ட்ரா
பேட்டர் இறப்பதற்கு முன் கடைக்கு ஒருவர் வந்து உள்ளார்.அவரது உருவம் ,
கைரேகை மற்றும் ரத்த மாதிரிகளை வைத்து கொண்டு காவல்துறை தீவிரமாக தேடி
வந்தனர்.
இதை
தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்கெட் (51) என்பவர் ஒரு
மருத்துவமனையில் உள்ள செவிலியர் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளார்.அந்த வேலைக்கு
இவர் தேர்வு செய்யப்பட்டு பார்கெட் தன்னுடைய கைரேகைகளை பரிசோதனைக்காக
சமர்ப்பித்தார்.
அப்போது
சோண்ட்ரா பேட்டர் அவரை கொலை செய்யப்பட்ட கொலைக்காரன் கைரேகையும் பார்கெட்
கைரேகையும் ஒன்றாக இருந்தது.இதனால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலை வைத்து கொண்டு போலீசார் கடந்த மார்ச் மாதம் பார்கெட் வீட்டிற்கு
சென்று டி என்ஏ வை பெற்று சோதனை நடத்தினர்.
சோதனையில்
கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த டி என்ஏ -வும் , பார்கெட் டி என்ஏ -வும்
ஒன்றாக இருந்தது.இதையடுத்து தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று
வருகிறது.20 வருடங்கள் கழித்து கொலையாளியை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக