இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆன்லைன் ஷாப்பிங் எனப்படும் இணையவழி வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக மலையளவு
மாற்றங்களை சந்தித்து வருகின்றது. மேலும் மேலும் அதிகமான மக்கள் இணையத்தில்
இருந்து பொருட்களை வாங்குவதையே விரும்புவதால், இ- காமர்ஸ் எனப்படும் இணைய வர்த்தக
தொழில் மிக போட்டியை கொண்டதாக மாறியதுடன், மெதுவாக பல நாடுகளில் பொருளாதார
சக்திமையமாகவும் மாறிவருகிறது.
ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங்
எனினும் பல்வேறு
சந்தர்ப்பங்களில் ஆன்லைன் ஷாப்பிங் நாம் விரும்பும் போல இருப்பதில்லை. முன்னணி
இணைய வர்த்தக நிறுவனங்கள் அவ்வப்போது செய்யும் தவறுகளுக்காக பெரிதும்
அறியப்படுகின்றன. தவறான அல்லது சேதமடைந்த பொருட்களை வழங்குவதன் மூலம் அல்லது
வாடிக்கையாளருக்கு தரமில்லா தயாரிப்புகளை வழங்குவதன் மூலமும் இந்த தவறுகள்
நிகழ்கின்றன.
பால்மா டி மல்லோர்கா
பால்மா டி மல்லோர்கா
இதுதொடர்பான அறிக்கையின்படி, ஸ்பெயினின் பால்மா டி
மல்லோர்கா-ஐ சேர்ந்த பெயரிடப்படாத நபர் கழிவுகள் நிறைந்த பொட்டல்களை அமேசானுக்கு
திருப்பி அனுப்பி வைத்தார். ஐபோன்கள் மற்றும் பிற பொருட்களுக்கான பெட்டிகளில்
அதன் உண்மையான எடைக்கு ஏற்றவாறு கழிவுகளை நிரப்பியதாக கூறப்படுகிறது. அந்த
பார்சல்களை திருப்பி அனுப்பிய பிறகு, அந்த நபரும் அவருடைய நண்பரும் பணத்தை
திருப்பி அளிக்க அமேசானை கேட்டுக்கொள்கின்றனர்.
மிகப்பெரிய அமேசான் மோசடி
மிகப்பெரிய அமேசான் மோசடி
திருப்பிச்
அனுப்பப்பட்ட பார்சல்கள் முறையான ஆய்வு இல்லாமல் கடைசியில் கிடங்கில்
சேர்க்கப்படுவது, அவை மோசடி செய்யப்பட்ட பார்சல்கள் என தெரிந்துகொள்ள அமேசான் அதிக
நேரம் எடுத்துக்கொண்டது என்பதற்கான சாத்தியமான காரணம் ஆகும். இது ஐரோப்பாவில்
நடைபெற்ற மிகப்பெரிய அமேசான் மோசடி மற்றும் இரண்டாவது மிகப்பெரிய உலகளாவிய மோசடி
ஆகும் .
ஸ்மார்ட்வாட்ச்கள், எக்ஸ்பாக்ஸ், டேப்லெட்கள்
ஸ்மார்ட்வாட்ச்கள், எக்ஸ்பாக்ஸ், டேப்லெட்கள்
முதலாவது மிகப்பெரிய மோசடியில், இன்டியானா-வை சேர்ந்த இரு
நபர்கள் அமேசானின் 2,700 பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் $ 1.2 மில்லியன்
சம்பாதித்தனர். இதில் ஸ்மார்ட்வாட்ச்கள், எக்ஸ்பாக்ஸ், டேப்லெட்கள் மற்றும்
மேக்புக்ஸ் ஆகிய தயாரிப்புகளும் அடக்கம். இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஆறு
ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
30 நாட்களுக்குள்...
30 நாட்களுக்குள்...
அமேசான் திரும்ப
வழங்கும் கொள்கை 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பொருட்களை
திரும்ப வழங்க அனுமதிக்கிறது. அப்பொருட்கள் சென்றடைந்த பிறகு அந்த நிறுவனம் மூன்று
முதல் ஐந்து வணிக நாட்களுக்குள் பணத்தை திரும்ப செலுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக