இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருச்சி
மாவட்டம் பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த தர்மா என்பவர் சென்னையில் ஓட்டுனராக
பணியாற்றி வருகிறார். தர்மாவிற்கும் ஜான்சி ராணி என்ற பெண்ணுக்கும் இரண்டு
வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
தர்மா
திருமணத்துக்கு பின்னர் அவரது மனைவியின் வசதிக்காக வீட்டில் குளியலறையை
காட்டியுள்ளார். மேலும், அவரது வீட்டின் பின்புறத்தில் இருந்து வயர் மூலம் அவர்
மின்சாரம் எடுத்து கழிவறைக்கு கனெக்சன் கொடுத்துள்ளார்.
தர்மாவிற்கு
திருமணமாகி இரண்டு வருடங்களாக குழந்தைகள் இல்லை என்பதால் இருவரும் அதிக பாசத்தோடு
வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் தர்மா மனைவியை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து
திருச்சிக்கு அடிக்கடி வந்துள்ளார்.
இந்தநிலையில்
தர்மா சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அன்றய தினம் தர்மாவின் மனைவி
குளியலறைக்கு செல்லும் வயரில், துவைத்த துணியை காயப்போட்டுள்ளார். அப்போது துணி
கீழே விழுந்த துணியை எடுக்க முயன்ற போது ஜான்சி ராணியின் மீது மின்சாரம்
பாய்ந்தது.
இந்த
காட்சியை பார்த்து பதறியடித்தபடி அங்கு வந்த தர்மா, மனைவியைக் காப்பாற்ற அருகில்
வந்து அவரை தொட்ட போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.சிறிது நேரத்தில்
மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து தகவலறிந்து
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக