இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆப்கானிஸ்தான் கரத் - கந்தகார்
நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த தற்கொலை வெடிகுண்டு
தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 34 பேர்
பலியானார்கள். கந்தகார் மாகாணத்தில் பரபரப்பான சந்தையில் நடந்த தற்கொலைத்
தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23
பேர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் குறைந்தது 3,812 ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர். வான்வழித் தாக்குதல்களால் மட்டும் 89 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறப்புகளுக்கு சர்வதேச சக்திகள் காரணமாக இருந்தன என ஐ.நா.வின் புதிய அறிக்கை தெரிவித்தது.
2019 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு
இடையில், 1,366 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் குறைந்தது 327 பேர்
குழந்தைகள் என்று ஆப்கானிஸ்தானில் ஐ.நா. உதவித் திட்டம் (யுனாமா) அறிக்கை
கூறுகிறது.
அரசு மற்றும் வெளிநாட்டுப் படைகளால்
ஏற்பட்ட உயிரிழப்புகளில் 31 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, 717 ஆப்கானிய
பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
போலீஸ் வாகனத்தை குறிவைத்து
தாக்குதல்: 5 பேர் பலி, 38 பேர் காயம்
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பச்சா கான் சவுக் என்ற இடத்தில் போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு மிக அருகில், இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
காவல் நிலைய அதிகாரியை குறிவைத்து
நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 2
போலீசார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயங்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். தற்கொலைப்படை தாக்குதலா? அல்லது ரிமோட் மூலம் வெடிக்க
வைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடப்பதாக உள்ளூர் பாதுகாப்பு படையினர்
தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக