Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

இனி தப்பா விளம்பரம் கொடுத்தா 2 வருஷம் ஜெயில்.. ரூ.10 லட்சம் வரை அபராதம்..


இனி தப்பா விளம்பரம் கொடுத்தா 2 வருஷம் ஜெயில்.. ரூ.10 லட்சம் வரை அபராதம்.. புதிய மசோதா ரெடி!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவருக்கும் விளம்பரங்களில் தவறான கூற்றுக்களைச் செய்தால், அவர்களுக்கு ஜெயில் மற்றும் அபராதம் விதிக்க, மக்களவையில் செவ்வாய்கிழமையன்று இது குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த நுகர்வோர் பாதுகாப்பு மசோதா 2019ன் படி, தொலைக்காட்சி, வானொலி, பிரிண்ட், வெளிப்புற விளம்பரங்கள், மின் வணிகம், நேரடி விற்பனை மற்றும் டெலி மார்கெட்டிங் உள்ளிட்ட எந்தவொரு ஊடகத்திலும் தவறாக வழி நடத்தும் விளம்பரங்களுக்கு அபராதமோ தண்டனையோ விதிக்க இந்த மசோதா முயல்கிறது

 புதிய மசோதா ரெடி! அதோடு இந்த மசோதா, இதுவரை சட்டமாக இல்லாததால், விளம்பரத் துறையில் ஒரு இடைவெளியைக் கொண்டிருந்தது. அதோடு விளம்பரங்கள், ஒரு சுயகட்டுப்பாடு கண்காணிப்புக் விளம்பர தர நிர்ணய கவுன்சில் Advertising Standards Council of India (ASCI) மூலம் மட்டுமே கண்காணிக்கப்பட்டு வந்தது.

 மேலும் இந்த மசோதாவின் கீழ், ஒரு தவறான விளம்பரங்கள், ஒரு தயாரிப்பு அல்லது சேவையை தவறாக விவரிக்கும் விளம்பரங்களாக வரையறுக்கப்படுகிறது. அத்தகைய தயாரிப்பு மற்றும் சேவையின் தன்மை, பொருள், அளவு, தரம் குறித்து ஒரு நுகர்வோரை தவறாக வழி நடத்தக்கூடும்.

ஒரு உற்பத்தியாளர் அல்லது சேவை வழங்குனர்களால், இத்தகைய நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், முக்கியமான தகவல்களை வேண்டுமென்றே மறைக்கும் ஒரு வெளிப்படையான அல்லது மறைமுகமான விளம்பரங்கள் கண்டிக்கதக்கது என்றும் இந்த மசோதா கூறுகிறது.

இந்த மாதிரியான நுகர்வோர் உரிமை மீறல்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், தவறான அல்லது தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட ஒரு குழு அமைக்கப்பட உள்ளது என்றும், இந்தக் குழு தலைமை ஆணையர் தலைமையில், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் டெல்லியில் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நுகர்வோர் உரிமை மீறல்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மூலம் குற்றவாளி உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் 10 லட்சம் வரை அபராதத்தையும், இந்த மசோதா மூலம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதே போல மீண்டும் மீண்டும் செய்யும் இந்த குற்றங்களுக்கு 50 லட்சம் அபராதமும், 5 வருட சிறைதண்டனையும் விதிக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக