இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ராவணன் தான் உலகின்
முதல் விமானி எனவும், 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் வானில் பறந்ததாகவும் இலங்கை
அரசு தெரிவித்துள்ளது.
விமானப்போக்குவரத்து நிபுணர்கள்,
வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புவியலாளர்கள் கலந்து
கொண்ட மாநாடு இலங்கையில் நடைபெற்றது. கட்டுன்யாகே என்ற இடத்தில் நடைபெற்ற இந்த
மாநாட்டில், இலங்கையை ஆண்ட ராவணன் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே வானில்
பறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய
இலங்கை விமானப் போக்குவரத்து துறையின் துணை தலைவர் சசி டானாதுங்கே முதன்முதலில்
விமானத்தை பயன்படுத்தி வானில் பறப்பதற்கு ராவணன் தான் முன்னோடி என்பதை நீருபிக்க
தங்களிடம் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார். அரசன் இராவணன் ஒரு
மிகப்பெரிய மேதை என்றும், அவர் தான் வானில் பறந்த முதல் நபர் எனவும் அவர் ஒரு
விமானி எனவும் சசி தெரிவித்தார். இது புராணக் கதையல்ல, உண்மைச் சம்பவம்
என்றும் தெரிவித்தார். அதற்கு விரிவான ஆராய்ச்சிகள்
தேவைப்படுவதால், அடுத்த 5 ஆண்டுகளில் தாங்கள் அந்த உண்மையை நிரூபிப்போம்
என்றும் அவர் தெரிவித்தார்.
ராவணன் இராமரின் மனைவி சீதாவை
கடத்தியதாக கூறும் கதைகளை மறுத்துள்ள பலர், அது இந்தியாவின் தரப்பு எனவும்,
உண்மையில் ராவணன் ஒரு உன்னதமான மன்னர் என்றும் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக
இலங்கையில் பண்டைய மன்னர் ராவணனை குறித்த புதிய ஆர்வம் நிலவி வருகிறது. அண்மையில்,
அந்நாடு தனது முதல் விண்வெளி பயனத்தில் ராவணன் என்ற செயற்கைகோளை விண்ணில்
செலுத்தியது. அந்நாட்டின் பெரும்பலான மக்கள் ராவணன் ஒரு கருணைமிக்க அரசன் எனவும்
ஒரு அறிஞர் என்றும் கருதுகின்றனர். சில இந்திய வேதங்கள் கூட அவரை மகா பிராமணர்
அல்லது பெரிய அறிஞர் எனவும் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக