>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

    பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்புக்கு 40 அம்மா ரோந்து வாகனங்கள் தொடக்கம்


    Image result for தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அம்மா ரோந்து வாகனங்களின் சேவையை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
    தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அம்மா ரோந்து வாகனங்களின் சேவையை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com




    சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக 40 அம்மா ரோந்து வாகனங்களின் செயல்பாட்டை முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இளஞ்சிவப்பு நிறத்திலான இந்த வாகனங்கள் சென்னை நகரில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக இனி உலா வரவுள்ளன.

    இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
    பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தும் திட்டத்தில் எட்டு பெருநகரங்களில் சென்னையையும் மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.425 கோடி நிதியானது சென்னை பெருநகரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மகளிர் காவல் நிலையங்கள்: சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், 15 இதர காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை பெருநகரத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து மகளிர் காவல் நிலைய ரோந்து பயன்பாட்டுக்காக அம்மா ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    எங்கெங்கு நிற்கும்: இளஞ்சிவப்பு நிறம் கொண்ட அம்மா ரோந்து வாகனங்கள் மூலமாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்கவும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை நகரத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வழிபாட்டு தலங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடற்கரை ஆகிய இடங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு தனிக்கவனம் செலுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    அம்மா ரோந்து வாகன தொடக்க  நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

    எண்கள் என்ன: ரோந்து வாகனங்களை அழைக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்களைப் பயன்படுத்தலாம். 

    அதன்படி 1091, 1098 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்கள், 
    இன்னல்களை இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரோந்து பணியிலுள்ள காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீர்வு காண்பர்.

    போக்குவரத்து விதிமீறல்: காவலர்களுக்கு நவீன கருவி

    போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 201 உடலில் பொருத்தும் கேமரா கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளை முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை அளித்தார்.

    கருவிகளின் சிறப்பம்சங்கள்: கேமரா கருவிகள் மூலமாக ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை எடுக்கலாம். அவற்றில் சம்பவம் நிகழ்ந்த தேதி, நேரம், இடம் ஆகியன தானாகவே பதிவாகும். கேமராக்களில் பொருத்தப்பட்டிருக்கும் 4ஜி இணைப்பு மூலமாக கேமராக்களின் நிழற்பட பதிவுகளை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் நேரலையில் கண்காணிக்கலாம்.

    மேலும், போக்குவரத்து அதிகாரிகள் எங்கு வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்பதையும் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் வழியாக வரைபடத்தில் நேரடியாக கண்காணிக்கலாம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக