இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆரம்ப காலக்கட்டத்தில் மொபைல்போனை
காண்பதே அரிது. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் மொபைல்போன் இல்லாத கைகளே இல்லை
என்று கூறலாம்.
தற்சமயம் தகவல் தொழில்நுட்பத்தின்
வளர்ச்சி அபாரமாக வளர்ந்து வருகிறது. இதன் விளைவுதான் மொபைல்போன்களில் இன்டர்நெட்
கனெக்ஷன்.
2G-ல் ஆரம்பித்த இந்த வளர்ச்சி இன்று
4G வரையிலும் வளர்ச்சியடைந்து உள்ளது. இதன்மூலம் உலகத்தையே மொபைல்போனில்
அடக்கிவிட்டனர்.
4G முதலில் இந்தியாவிற்கு
அறிமுகப்படுத்திய நிறுவனம் 'Airtel". இதன்மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கான
வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்தது.
தகவல் தொழில்நுட்பத்தில் இன்டர்நெட்
முதல் DTH வரை தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது இந்த நிறுவனம்.
சைக்கில் உதிரிபாகங்களை விற்க
ஆரம்பித்த ஒருவர் தற்போது உலகத்தில் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்கான ஏர்டெல்லை
வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவருக்கு கீழ் கிட்டத்தட்ட 20000-க்கும்
மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
கையில் ஒன்றுமே இல்லாமல் தந்தையிடம்
இருந்து வாங்கிய 15,000 ரூபாய் பணத்துடன் தொழில் தொடங்கலாம் என்று பஞ்சாப்
லூதியானாவிலிருந்து கிளம்பிய இவர், இன்று பில்லியன் டாலர் நிறுவனத்துக்கு
சொந்தக்காரர்.
இன்று இந்தியா மட்டுமல்லாமல் இலங்கை,
ஆப்பிரிக்கா, அமெரிக்கா, சிங்கப்பூர் என பல நாடுகளிலும் தனது நிறுவனத்தின் மூலம்
மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார்.
இவர் யார் என்று யோசிக்கிறீர்களா....?
அவர்தான் ஏர்டெல் நிறுவனத்தை தொடங்கிய 'சுனில் பார்தி மிட்டல்".
பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை
தொடங்கியவர், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகிய பெருமைக்குரியவர்
திரு.சுனில் மிட்டல் ஆவார்.
சுனில் பார்தி மிட்டல் 1957ஆம் ஆண்டு
அக்டோபர் 23ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் சத் பால் மிட்டல்
ஆவார்.
சுனில் பார்தி மிட்டல் தனது
பள்ளிப்படிப்பை உத்தரகாண்டில் உள்ள முசோரியிலும், மேலும் மத்தியப் பிரதேசத்தில்
உள்ள குவாலியரிலும் படித்தார். தனது பட்டப்படிப்பை பஞ்சாபில் உள்ள Arya College-ல்
படித்தார்.
இவர் 1976ஆம் ஆண்டு தனது 18வது வயதில்
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது இவருடைய கையில் எதுவுமே
இல்லை. ஆனால், கண்கள் நிறைய கனவு இருந்தது. இவருடைய குடும்பத்தில் இவர்தான்
முதன்முறையாக பிசினஸ் தொடங்கலாம் என்று புறப்பட்ட முதல் தொழில் முனைவர்.
இவர் தந்தையிடம் இருந்து வாங்கிய
15,000 ரூபாய் பணத்தை வைத்து சைக்கிளின் ஒரு பாகமான க்ராங்க்ஷாஃப்ட்டை உற்பத்தி
செய்து விற்க தொடங்கினார். ஒரு லாரியில் பொருட்களை எடுத்துக்கொண்டு இவரே நேரடியாக
போய் விற்று வந்தார்.
இரண்டு வருடத்தில் ஸ்டெய்ன்லெஸ்
ஸ்டீல், நூல் உற்பத்தி போன்ற பிசினஸில் இறங்கினார். இப்படி போய்க்கொண்டிருந்த
தொழிலில் இவருக்கு திருப்தியே ஏற்படவில்லை.
வளர்ச்சிக்கு மிக முக்கியமான
அளவுகோல், விற்பனைதான். இது சைக்கிள் தொழிலில் இவருக்கு கைக்கொடுக்கவில்லை. அதனால்
இத்தொழிலை விட்டுவிட்டு, வாய்ப்புகளை தேடி 1980-ல் மும்பைக்கு சென்றார். சர்வதேச
வர்த்தகத்தில் ஈடுபட முனைந்தபோதுதான் இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை
ஏற்பட்டது.
சுனில் மிட்டல் - சர்வதேச வர்த்தகம் கற்றுக்கொடுத்த பாடம் :
சுனில் பார்தி மிட்டல், ஜப்பானின் சுஸூகி
மோட்டார்ஸஷுடன் சேர்ந்து ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்து விற்கும் பிசினஸை
தொடங்கினார். சர்வதேச வர்த்தகமானது இவருக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி?
பிராண்டிங் செய்வது எப்படி? என்பது போன்ற பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது.
சர்வதேச சந்தையில் தொழில் செய்தபோதுதான்
வாய்ப்புகள் எங்கேயெல்லாம் இருக்கிறது? அவற்றை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என்று இவருக்கு தெரிந்தது.
முதன்முறை தொழில் செய்யவரும்
பலருக்கும் இருக்கும் பிரச்சனை இவருக்கும் இருந்தது.
ஒன்று, வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்வதற்கு தேவையான முதலீடு. இரண்டாவது, பிசினஸை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான
திறமையான நபர்களை கொண்ட குழு.
இந்த இரண்டு பிரச்சனையையும் தாண்டி வர
இவர் ஒரு வழியை கண்டுபிடித்தார். அது என்னவென்றால், பெரிய நிறுவனங்களோடு சேர்ந்து
தொழில் செய்வதுதான்.
ஆனால், அவர் தொழில் செய்ய வந்தபோது,
பல தொழில்கள் அரசு கட்டுப்பாட்டிலும், சில தொழில்கள் அதிபர்களின்
கட்டுப்பாட்டிலும் இருந்தன. அவ்வளவு எளிதில் யாரும் தொழில்களைப் பெரிய அளவில்
தொடங்கிவிட முடியாது.
என்ன உற்பத்தி செய்ய வேண்டும்?
எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும்? என பல கட்டுப்பாடுகள் இருந்தன. அப்படி இருந்த பல
தடைகளை எல்லாம் மீறித்தான் தொழில் செய்வதற்கான அனுமதியை வாங்கினார் சுனில் பார்தி
மிட்டல்.
புதிய யோசனை :
ஒருமுறை தைவான் சென்ற சுனில் பார்தி
மிட்டல், அங்குள்ள மக்கள் பட்டன் டைப் செல்போன்கள் பயன்படுத்துவதை கண்டார்.
அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்தியாவில் பட்டன் டைப் போன்களை
அறிமுகப்படுத்தினால் என்ன? என்று யோசித்தார். அதை நடைமுறையும் படுத்தினார். அதோடு
மட்டுமல்லாமல் Fax இயந்திரத்தையும் இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
இதில் இவருக்கு வெற்றி கிடைத்தது.
டெலிகாம் துறையில் இவரின் முதல் முயற்சி :
1991-92 இடைப்பட்ட காலம்தான் சுனில்
மிட்டலின் வாழ்க்கையில் மறக்கமுடியாத பொற்காலம் எனலாம். அப்போதுதான் மொபைல்
நெட்வொர்க்குகளுக்கான டென்டரை அரசு அறிவித்தது. அப்போது பெரிய நிறுவனங்கள் எல்லாம்
பின்வாங்கியபோது சுனில் மிட்டல் துணிந்து இறங்கினார்.
இரண்டு, மூன்று வருடங்களில் டென்டர்
எடுத்த பிற நிறுவனங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. ஆனால், பார்தி நிறுவனம் டெலிகாம்
துறையில் பல கஷ்டங்களுக்கு இடையே தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
2003-ல்தான் பார்தி, ஏர்டெல் என்ற
பிராண்டின் கீழ் சேவையைத் தரத் தொடங்கியது. France Telecom கம்பெனியுடன் கூட்டு
சேர்ந்து 1994-ல் Airtel-ஐ டெல்லியில் துவங்கினார். சில வருடங்களிலேயே 2 லட்சம்
வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்தார்.
காலப்போக்கில் செல்போன்
உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல்
கவர்ச்சிகரமான பேக்குகளை அறிவித்தார். இதனால் இந்திய மக்களில் பெரும்பாலானோர்
ஏர்டெல்-யை பயன்படுத்த ஆரம்பித்தனர். அதனால் இது இந்தியாவின் மிகப்பெரிய
நெட்வொர்காக உருமாறியது. 2G 3G 4G என இந்தியாவிற்கு அதிவேக நெட்வொர்க்குகளை வழங்கி
இன்னும் அதிக வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தினர்.
அசாத்திய திறமை!
2000-2005 இடைப்பட்ட காலத்தில் பார்தி
செல்லுலார் அடைந்த வளர்ச்சி எவராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது.
2005-ல் இந்தியாவில் அசைக்க முடியாத ஆலமரமாக பார்தி ஏர்டெல் நின்றது.
இவர் டெலிகாம் துறையில் நுழைந்த
அதேசமயம், வேறு சில நிறுவனங்களும் டெலிகாம் துறையில் இருந்தன. ஆனால், அந்த
நிறுவனங்கள் போட்டி போட முடியாத அளவுக்கு தரமான சேவையை எல்லாத் தரப்பினருக்கும்
அளித்ததுதான் சுனில் மிட்டலின் வெற்றிக்கு முக்கிய காரணம்!
ஒரு நல்ல பிசினஸ்மேனுக்கு எது
வேண்டாம்? எது வேண்டும்? என்பது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அது சுனில்
மிட்டலுக்கு கைவந்த கலையாக இருந்தது. தன் வளர்ச்சிக்காக சரியான நிறுவனங்களுடன்
கூட்டு வைத்துக்கொண்ட சுனில் மிட்டல், அதேநேரத்தில் உள்நோக்கத்தோடு அணுகும்
பிசினஸ் டீலிங்ஸைத் தவிர்க்கவும் தெரிந்து வைத்திருந்தார்.
இந்தியாவில் 2ஜி அலைக்கற்றை மட்டுமே
இருந்த சமயம், 3ஜி அலைக்கற்றைக்கு மாற வேண்டிய கட்டாயம் வந்தது. வேறு யாரேனும்
அந்த இடத்தைப் பிடிப்பதற்குள் ஏர்டெல் அதைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பிய
சுனில் மிட்டல் 80% கூடுதல் தொகையை முதலீடு செய்தார். அதன் மதிப்பு 2012-ல்
ரூ.14,000 கோடியாக உயர்ந்தது.
நெருக்கடிகளுக்கு ஆளான ஏர்டெல்!
2008-க்குப் பிறகு டெலிகாம் துறையில்
பெரிய அளவில் போட்டி ஆரம்பித்தது. ஏர்டெல்லுக்கு நெருக்கடி கொடுக்க இந்திய மற்றும்
சர்வதேச நிறுவனங்கள் வரிசை கட்டின. அவை பெரும் பணத்தை முதலீடு செய்து ஆஃபர்களை
அள்ளித் தந்தன. மக்களும் ஆஃபர்களைப் பார்த்து, அந்த நிறுவனங்களின்
நெட்வொர்க்குகளுக்குத் தாவினர். மெல்ல மெல்ல அவற்றின் சந்தை மதிப்பு உயர
ஆரம்பித்தது. அதேசமயம், ஏர்டெல் சந்தை மதிப்பு குறைய ஆரம்பித்தது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையைச்
சமாளிக்க சுனிலுக்கு இரண்டு வருடங்கள் ஆனது. உயர் அதிகாரிகள் உள்பட நிறுவனத்தின்
வளர்ச்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களை எல்லாம் பாரபட்சமின்றி
வெளியேற்றினார். திறமையானவர்களை உள்ளே கொண்டு வந்தார். தொழிலில் பொறுப்புகளைச்
சரியான நபரிடமே கொடுத்திருந்தாலும் அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்
என்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் கோடிகளில்
லாபம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் இந்தியா உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 2G, 3G,
4G டெலிகாம் சேவைகளை வழங்கி வருகிறது.
சைக்கிள் உதிரிபாகங்களை விற்க
ஆரம்பித்த சுனில் மிட்டல் தற்போது உலகத்தில் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்கான
ஏர்டெல்லை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவருக்குகீழ் கிட்டத்தட்ட
25,000த்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
சுனில் மிட்டல் இந்தியா, ஸ்ரீலங்கா,
சிங்கப்பூர் மற்றும் ஆப்பிரிக்காவில் தனது நெட்வொர்க்கை வெற்றிகரமாக நடத்தி
வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஏர்டெல் DTH-ஐ ஆரம்பித்து இந்தியாவில் கேபிள் டிவி
சர்வீஸை நடத்தி வருகிறார்.
இந்நிறுவனம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில்
20 நாடுகளில் செயற்பட்டு 300 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இன்று உலகின் மூன்றாவது பெரிய
டெலிகாம் கம்பெனியாக இருக்கிறது ஏர்டெல். பார்தி நிறுவனத்தின் நிகர வருமானம்
சுமார் 91,000 கோடி ரூபாய்க்கு மேல்.
பார்தி ஃபவுண்டேஷன் :
சுனில் மிட்டல், ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கு உதவ நாடு முழுவதும் 250 பள்ளிகளை ஆரம்பித்து பார்தி ஃபவுண்டேஷன்; என்ற
பெயரில் கல்வி அளித்து வருகிறார்.
வெற்றிக்கான மந்திரம் :
தான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதனை
திறம்பட செய்யும் வரை ஓடிக்கொண்டிருப்பதே தனது வெற்றிக்கான மந்திரம் என்று சுனில்
மிட்டல் கூறியுள்ளார்.
பார்தி - ஏர்டெல் நிறுவனத்தின்
பிதாமகனான சுனில் மிட்டலுக்கு வந்த கனவுகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானவை.
அத்தனையும் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா என்று எப்போதுமே தயங்கி நின்றதில்லை அவர்.
பார்தி மிட்டல் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின்
பெருமைக்குரிய பதிவுகள்!
விருதுகள் :
சுனில் பார்தி மிட்டல் 2007ஆம் ஆண்டு
இந்திய அரசிடமிருந்து 'பத்மபூஷண்" விருதை பெற்றார்.
இவருக்கு 'ஆசியாவின் சிறந்த டெலிகாம்
தலைமை நிர்வாக அதிகாரி"க்கான விருது, டெலிகாம் ஆசிய விருதுகளால் 2005ல்
வழங்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு 'இன்சீடு (INSEAD)
வணிகத் தலைவர்" விருதை பெற்றார்.
2005ல் 'சிறந்த சிஇஓ" மற்றும்
'நிறுவன முதலீட்டாளருக்கான" விருது இவருக்கு வழங்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு 'Asia Businessman of
the Year" என்று பார்ச்சூன் இதழில் வெளியிடப்பட்டது.
2016ல் 'பன்னாட்டுத் தொழில் வணிகச்
சங்கத் தலைவராக" தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பார்தி நிறுவனத் தலைவர் மற்றும் அந்த
குழுமத்தின் சிஇஓ சுனில் பார்தி மிட்டலுக்கு 2010 ஆண்டில் 'சிறந்த அறக்கொடையாளர்
விருது" வழங்கப்பட்டது. கல்விப் பணிகள், இயலாதோருக்கு உதவுதல்,
ஆதரவற்றோருக்கு நிதியுதவி என பார்தி அறக்கட்டளை சார்பில் சுனில் மிட்டல் செய்துள்ள
அறப்பணிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
பார்தி ஏர்டெல் சேவை துவங்கப்பட்ட சில
ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம் என்ற பெயரை 2 மில்லியன்
வாடிக்கையாளர்களிடம் ஏர்டெல் பெற்றுள்ளது.
சுனில் மிட்டல் டெலிகாம் துறைக்கு
மட்டுமல்ல, ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். பிசினஸில்
வெற்றி பெற முதலீடு முக்கியமில்லை, வித்தியாசமான அணுகுமுறைதான் அவசியம் என்பதை
நிரூபித்து காட்டியுள்ளார் சுனில் மிட்டல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக