Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

போலந்து நாட்டில் மின்னல் தாக்கி பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



 
 
போலந்து நாட்டின் தெற்கு பகுதியில் தத்ரா பிராந்தியம் அமைந்துள்ளது. மலைப்பிரதேசமான இங்கு, கியோவண்ட் என்ற சிகரம் உள்ளது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் கியோவண்ட் சிகரத்தில் ஏறி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.
 அப்போது அந்த பகுதியில், திடீரென சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. பெரும் சூறாவளியும் வீசியது. அத்துடன் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தத்ரா பிராந்தியத்தின் பல்வேறு பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த மலையேற்ற வீரர்களும் சிக்கினர். 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
மேலும் ஜாகோபேன் என்ற நகரில் மின்னல் தாக்கி பச்சிளம் குழந்தை ஒன்று பலியானது. மின்னல் தாக்கியதில் 100-க்கும் மேற்பட்டார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மின்னல் தாக்கியதை தொடர்ந்து, கியோவண்ட் சிகரத்தில் இருந்த மலையேற்ற வீரர்கள் அனைவரும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!