இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தெற்கு
பிரேசிலில் உள்ள மொஸ்டர்டாஸில் ஆயுதக் குழு ஒன்று களியாட்ட விடுதிக்குள் நுழைந்து
ஊழியர்கள் மற்றும் அங்கு வந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை
மேற்கொண்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) அந்நாட்டு நேரப்படி அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் 4 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு குறித்த இடத்திற்கு வந்த ஆயுதக்குழு, அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்களின் தொலைபேசிகள் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள போர்டோ அலெக்ரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு சம்பவம் தொடர்பாக நேற்று பிற்பகல் வரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு பிரேசிலிய நகரமான பெலெமில் மே மாதம் இடம்பெற்ற ஆயுதக்குழுவின் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக