Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோவில், கூடலூர்.



Image result for அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில், கூடலூர்.


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  
பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




ராமாயண நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் இங்கு தத்ரூபமாக சிலையாக வடித்துள்ள அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் திருக்கோவில் பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் இணைக்கும் மேற்கு மலைத்தொடர்ச்சியின் எல்லையில் அமைந்த தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் அமைந்துள்ளது.

மூலவர் : கூடல் அழகிய பெருமாள்.

உற்சவர் : சுந்தர்ராஜர்.

அம்மன் : மகாலட்சுமி.

தல விருட்சம் : புளியமரம்.

ஆகமம் : பாஞ்சராத்ரம்.

பழமை : 500 வருடங்களுக்கு முன்.

புராண பெயர் : திருக்கூடலூர்.

ஊர் : கூடலூர்.

மாவட்டம் : தேனி.

தல வரலாறு :

சிவனிடம் வரம் பெற்ற அசுரன் ஒருவன், தேவர்களை துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் அசுரனின் அழிவு குறித்து ஆலோசிக்க, தேவர்களை அழைத்தார்.

பின்பு, அசுரனிடமிருந்து தேவர்களைக் காத்த மகாவிஷ்ணு, அவர்களின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். காலப்போக்கில் இங்கு சுவாமிக்கான வழிபாடுகள் மறைந்துபோனது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட, சிற்றரசர் ஒருவர் மதுரை கூடலழகர் மீது தீவிர பக்தி கொண்டு, தினந்தோறும் தரிசித்துவிட்டு தனது பணியை துவங்கிக் கொண்டிருந்தார்.

அரசருக்கு தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில், கூடலழகருக்கு கோவில் எழுப்ப வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் எங்கு, எப்படி கோவில் அமைப்பது என அவருக்குத் தெரியவில்லை. அவரது கனவில் தோன்றிய கூடலழகர், இத்தலத்தை சுட்டிக்காட்டி கோவில் எழுப்பும்படி கூறினார்.

அதன்படி மன்னர், தான் கண்ட அமைப்பில் தாயார்களுடன் சுவாமிக்கு சிலை வடித்து, இங்கு கோவில் எழுப்பினார். சுவாமிக்கு, கூடல் அழகர் என்றே திருநாமம் சூட்டினார்.

தல பெருமை :

திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் ஆகிய தலங்களில் பெருமாள், அஷ்டாங்க விமானத்துடன் அமைந்த சன்னதியில் காட்சி தருகிறார்.

மூலஸ்தானத்தில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில், தாயார்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வெள்ளிதோறும் வாசனை திரவியம், நல்லெண்ணெய் சேர்ந்த கலவையால் காப்பிட்டு பூஜை செய்கின்றனர்.

இவர் மதுரை கூடலழகர் பெயரிலும், உற்சவர் திருமாலிருஞ் சோலையில் அருளும் சுந்தர்ராஜர் (கள்ளழகர்) என்ற பெயரிலும் அழைக்கப்படுவது விசேஷம்.

பிரச்சனையால் பிரிந்த தம்பதியர்கள் அல்லது உறவினர்கள் மீண்டும் சேர சுவாமிக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மீண்டும் இணைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சித்ரா பவுர்ணமியன்று விழா கொண்டாடப்படும், அன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், பூஜைகள், உற்சவர் இரவில் வீதியுலா சென்று மறுநாள் அதிகாலையில் கோயிலுக்குத் திரும்புவார்.

திருக்கார்த்திகையன்று இதில் தீபமேற்றி, சுவாமிக்கு விசேஷ பூஜை செய்கிறார்கள். இங்குள்ள கல்லால் செய்யப்பட்ட கொடுங்கை அவசியம் காண வேண்டியது.

பிரார்த்தனை :

துவங்கும் செயல்கள் வெற்றி பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க, திருமணத்தடை நீங்க கூடலழகரிடம் வேண்டிக்கொள்ளலாம். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக