இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வாகனங்கள்
திருட்டை தடுக்கும் வகையில் மைக்ரோடாட்ஸ் என்னும் புதிய தொழில்நுட்பத்தை
பயன்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகின்றது.
வாகனங்கள்
திருட்டை தடுக்கும் வகையில் மைக்ரோடாட்ஸ் என்னும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த
மத்திய அரசு பரிசீலனை செய்து வருகின்றது.
வாகனங்கள்
திருடப்படுவதை தடுக்கவும், போலி உதிரி பாகங்களை அடையாளம் காணவும் மைக்ரோடாட்ஸ்
என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
செய்வதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அது தொடர்பாக பொதுமக்கள் 30 நாட்களுக்குள்
கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதைத்தொடர்ந்து
அந்த வரைவு அறிக்கையில் வாகனங்கள் மற்றும் அதன் பாகங்களில் கண்களால் காண முடியாத
மைக்ரோடாட்ஸ் நிரந்தரமாக பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மைக்ரோஸ்கோப்
மற்றும் அல்ட்ராவைலட் ஒளி மூலம் மட்டுமே அந்த மைக்ரோடாட்ஸை அடையாளம் காண முடியும்
என்றும் கூறப்படுகிறது.
வாகனங்களில்
உடல் பாகங்களுக்கு அடிக்கப்படும் ஸ்ப்ரே மற்றும் உதிரி பாகங்களில் இதனை இடம் பெற
செய்ய முடியும். மேலும் வாகனத்தை சேதப்படுத்தாமல் அதனை நீக்க முடியாது என்பதும்
இதன் சிறப்பு அம்சமாகும். இந்த மைக்ரோடாட்ஸ் தொழில்நுட்பம் வாகனங்கள்
திருடப்படுவதை தடுக்கவும் மற்றும் போலியான உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதை
தடுக்கவும் உதவும் என்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக