Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து வரவுள்ள அட்டகாசமான அப்டேட்ஸ்!


 

 

 

 

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள் 
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்ஸ் வருகிறது, அவற்றின் பயன்கள் என்ன என்பது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.




வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களை கவரும் விதமாக மெசேஜ்களை அனுப்புவதில் புதிய அப்டேட்டுக்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்,வாட்ஸ்அப்பில் இனி வரவுள்ள அப்டேட்ஸ்கள், அவற்றின் பயன்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.

போட்டோ எடிட்:
வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு போட்டோ அனுப்பும் போது, மேற்புறத்தில் மூன்று புள்ளிகள் கொண்ட ஆப்ஷன் காட்டப்படும். அந்த ஆப்ஷனை க்ளிக் செய்து, போட்டோவை எடிட் செய்து கொள்ளலாம். கலர் மாற்றுதல், பெயிண்ட், எழுத்துக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதில் கொண்டு வரப்படுகிறது. முதற்கட்டமாக இந்த வசதி சோதனை அளவில் உள்ளது. விரைவில் இது மற்ற ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஸ்மார்ட்போனில் கொண்டு வரப்பட உள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்:
வாட்ஸ்அப்பில் பிளாக் செய்யப்பட்டவர்களின் ஸ்டேடஸ் பயனாளர்களுக்கு தெரியாது. ஒரு வேளை அவ்வாறு ஸ்டேட்டஸ் பார்க்க வேண்டுமென்றால், பிளாக்கை எடுத்து விட்டு தான் பார்க்க முடியும். இதற்கு சுலபமாக Hide Muted Status என்ற வசதியை வாட்ஸஅ்ப் கொண்டு வருகிறது. இதன் மூலம் ஸ்டேட்டஸ் மட்டும் Mute/Show செய்து கொள்ளலாம். எனவே, ஸ்டேட்டஸை பார்க்க வேண்டாம் என்று நினைத்தால் Mute ஆப்ஷனும், பார்க் வேண்டும் என்று நினைத்தால் Show ஆப்ஷனும் தேர்வு செய்து கொள்ளலாம்



டார்க் மோட் வசதி:
இரவில் பயன்படுத்தும் போது அதிகப்படியான வெளிச்சம் காரணமாக கண் கூசுவதாக வாடிக்கையாளர்கள் எண்ணினர். தற்போது அவர்களது மனக்குறையை போக்கும் வகையில், இரவில் கண்கூசாதாவாறு புதிய வசதி வாட்ஸஅப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு டார்க் மோட் (Dark Mode) என்று பெயர்.

முன்னதாக இந்த சிறப்பம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.19.82 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்தது. அது வெற்றியடைந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது

ஃபார்வேர்டு மெசேஜ் கணக்கு:
இதே போல், நமக்கு வரும் ஃபார்வேர்டு மெசேஜ், எத்தனை முறை ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வசதியை கொண்டு வருவதற்கு சோதனை செய்து வருகிறது. இந்த வசதி வரும்போது, ஒருவர் நமக்கு ஃபார்வேர்டு மெசேஜ் அனுப்பினாலோ, அல்லது வாட்ஸ்அப்பில் குரூப்பில் வரும் வரக்கூடிய ஃபார்வேர்டு மெசேஜ் எத்தனை முறை ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியலாம். இந்த முறையில், பழைய செய்திகள், காலாவதியான செய்திகள் ஏதேனும் ஃபார்வேர்டு செய்யப்பட்டால், அதனை சுலபமாக அறிந்து கொள்ள முடிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!