Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்க ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு!

 Image result for ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்க ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத நிதிக்கொள்கை கூட்டத்தில் ஆர்டிஜிஎஸ்(RTGS) மற்றும் என்இஎப்டி (NEFT), ஐஎம்பிஎஸ் (IMPS) மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணங்களை நீக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கவும் கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 நடப்பு நிதியாண்டில் 3- வது நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதில் குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதத்தை 0.35 சதவீதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனை தொடர்ந்து நாட்டில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றமான 'நெப்ட்' (NEFT- NATIONAL ELECTRONIC FUNDS TRANSFER) பரிமாற்றத்தை, அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் எந்தவித கட்டணமின்றி 24 மணி நேரமும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 தற்போது உள்ள விதிமுறையின்படி, தேசிய மின்னணு நிதிப்பரிமாற்றமான 'நெப்ட்' யை (NEFT- NATIONAL ELECTRONIC FUNDS TRANSFER) பயன்படுத்தி 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது. 
வாடிக்கையாளர்கள் நெப்ட் மூலம் பணப்பரிவர்த்தனையை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே அனைத்து வேலை நாட்களில் பரிமாற்றம் செய்ய முடியும். இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நெப்ட் பரிமாற்றத்தைச் செய்ய முடியாது.
இந்த நெப்ட் பரிமாற்றத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளர் ரூபாய் 2 லட்சம் வரை பரிமாற்றம் செய்யலாம். இந்நிலையில் தான் அனைத்து நாட்களிலும் பணப்பரிவர்த்தனையை நெப்ட் மூலம் மேற்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக