இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
செய்முறை:
- முதலில் தரையில் கால்களை நீட்டி நேராக அமரவும்.
- இடது காலை மடக்கி குதத்தை தொடுமாறு வைக்கவும்.
- பின்னர் வலது காலை மடக்கி பாதத்தை இடது முழங்காலின் அருகில் வெளிப்புறம் பார்த்தவாறு வைக்கவும்.
- இப்பொழுது இடது கையை வலது மூட்டின் வெளிப்புறத்தை சுற்றிக்கொண்டு வந்து வலது பாதத்தை தொட முயற்சி செய்யவும்.
- வலது கையை முதுகிற்கு பின்னால் எடுத்துக் கொண்டு இடது தொடையை பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
- இப்பொழுது உடலை வலது பக்கம் திருப்பி பின்னோக்கி பார்க்கவும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும்.
- இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் அல்லது 20 வினாடிகள் இருக்கவும்.
- பின் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பவும்.
- இதே போல மறுபுறமும் மாற்றி செய்ய வேண்டும்.
பலன்கள்:
- மேலே கூறிய வக்ராசனத்தின் நன்மைகள் அனைத்தும் இந்த ஆசனத்தில் கிடைக்கும்.
- ஆண்மை குறைவிற்கு இந்த ஆசனம் சிறந்த பலன் தரும்.
- நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தரும்.
- கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும்.
- மலச்சிக்கல், அஜீரணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- பெண்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வர கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- வயிற்று பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியான தசையை குறைக்க இந்த ஆசனம் பேருதவி செய்கிறது.
- மேலும் இளமையான தோற்றத்தையும் தருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக