>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 14 ஆகஸ்ட், 2019

    தேசப்பிதாவிற்காக... காந்தி மண்டபம்..!

    Image result for தேசப்பிதாவிற்கு... காந்தி மண்டபம்..!



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் காந்தியின் நினைவாக கட்டப்பட்டுள்ள இடம்தான் காந்தி மண்டபம். கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 2கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 22கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    சிறப்புகள் :

    கன்னியாகுமரி புராண வரலாறு, கலாச்சார சிறப்புகள் மிக்க ஒரு புண்ணியத்தலம். உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

    இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அலைகடலோரத்தில் அண்ணல் காந்தியின் நினைவு மண்டபம் அமைந்துள்ளது.

    காந்தி மண்டபம் என்றழைக்கப்படும் காந்தி நினைவகம், நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.

    ஒரிசா மாநிலத்தில் உள்ள கோவில்களை போன்ற கட்டிட வடிவமைப்புடன் காந்தி மண்டபம் இருப்பது ஒரு சிறப்பு.

    பிரார்த்தனைக் கூடத்தின் மேற்கூரை அரை வட்ட வடிவில் அழகாகத் திகழ்கிறது. கூடத்தின் நடுவில் பளிங்குக் கற்களாலான பீடம் உள்ளது. இதற்கு நேரே மேற்கூரையில் ஓர் துவாரம் காணப்படுகிறது.

    இந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள துளை வழியாக காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 அன்று அவரது அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சூரிய கதிர்கள் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியின் எழிலை கண்டு களிக்க வரும் சுற்றுலாப் பயணிகளும், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபட வரும் பக்தர்களும், காந்தி நினைவு மண்டபத்திற்கும் வருகை தந்து, காந்தியை நினைவுக்கூர்ந்து அவரது உயர்ந்த கொள்கைகளைப் போற்றி மகிழ்கின்றனர்.

    இந்த நினைவகத்தின் மற்றொரு சிறப்பு இங்குள்ள நூலகம். இங்கே நம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னால் வெளிவந்த பழைய புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் இதழ்களும் இருக்கின்றன.

    எப்படி செல்வது?

    கன்னியாகுமரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

    விமானம் வழியாக :

    தூத்துக்குடி விமான நிலையம்.

    ரயில் வழியாக :

    கன்னியாகுமரி ரயில் நிலையம்.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    பார்க்க வேண்டிய இடங்கள் :

    விவேகானந்தர் பாறை.
    திருவள்ளுவர் சிலை.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    திற்பரப்பு அருவி.
    பத்மநாபபுரம் அரண்மணை.
    வட்டக்கோட்டை.
    முட்டம்.
    கீரிப்பாறை.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக