இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நம்மைச் சுற்றி அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கோவில்கள்.
ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். அவை நம்மில் பலருக்கும் தெரிந்தவையும் இருக்கும், சில தெரியாத விஷயங்களும் இருக்கும்.
இன்று நாம் பார்க்கப்போவது திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கழுக்குன்றத்திலுள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலில் நிகழும் அதிசயத்தைப் பற்றி தான்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில். இந்த மலைக்கோவிலில் உள்ள குளத்தில் தான் அற்புதமான, அதிசய நிகழ்வு நடக்கிறது.
அப்படி என்ன அதிசயம் அங்கு நடக்கிறது? என்று பார்க்கலாம் வாங்க...
இந்த சிவன் கோவிலில் உள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கிறதாம்.
பொதுவாக உப்பு நீரிலும், கடலிலும் தான் சங்கு பிறக்கும். ஆனால் இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இந்த சங்கு தோன்றுகின்றது. இதுவரை 7 சங்குகள் இந்த குளத்தில் பிறந்துள்ளன.
இதனாலேயே இக்குளத்திற்கு சங்கு தீர்த்தக் குளம் எனப் பெயர் வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த குளத்தில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். மேலும், இக்கோவிலில் சங்கு பிறக்கும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
குளத்தில் சங்கு தோன்றுவதே அனைவருக்கும் வியப்பாக இருக்கும் பட்சத்தில், சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவது அங்குள்ள அர்ச்சகர்களுக்கும், பக்தர்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
சங்கு பிறக்கும்போது நிகழும் அதிசயம் :
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும்போது குளத்திலுள்ள அலைகள் அதிகமாவதுடன், குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.
குளத்தில் உள்ள சங்கு கரை ஒதுங்கியதும் கோவில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்து வைப்பார்கள். அப்பொழுது அந்த சங்கின் உள்ளே இருந்து சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்து விட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்று விடும்.
அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அற்புதமான நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம் குளத்தை சுற்றிலும் நிரம்பியிருக்கும்.
இங்குள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சிவன் கோவிலில் இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இயற்கையாக தோன்றும் இந்த சங்குகள் அனைவருக்கும் ஒரு அதிசயமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக