இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய சூழலில் குழந்தைகள் படித்துக்கொண்டே இருப்பதால் அவர்கள் மந்தமான நிலையில் இருக்கின்றன. சிறிது நேரம் அவர்கள் வெளியில் சென்று எல்லோருடன் சேர்ந்து விளையாடும்போது புத்துணர்ச்சியாக இருப்பார்கள் அல்லவா?குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற நேரமாக மாலை நேரத்தை குறிப்பிடலாம். அவ்வாறு மாலை நேரங்களில் விளையாடுவதற்கு என்று சில விளையாட்டுகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் வெயிலா? நிழலா?. வாருங்கள் அந்த விளையாட்டைப் பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை 20 முதல் 30 நபர்கள் வரை விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டு விளையாடும் இடத்தில் வெளிச்சம் மற்றும் இருட்டு இருக்க வேண்டும். இவற்றில் வெயில் என்றால் வெளிச்சத்தையும், இருட்டு என்றால் நிழலையும் குறிக்கும்.
பின்பு விளையாடும் குழந்தைகள் அனைவரையும் வட்டமாக நிற்க வைத்து முதல் போட்டியாளரை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு தேர்வு செய்த பின் மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் மைதானத்தில் ஒன்றுச் சேர்ந்து நின்றுக்கொள்ள வேண்டும்.
அதன்பின் தனியாக நிற்கும் முதல் போட்டியாளரைப் பார்த்து, மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் 'ஊருக்குப் போயி வந்த மச்சானே சொல்லு.. வெயிலா..? நிழலா..?" என்று கேட்க வேண்டும்.
உடனே முதல் போட்டியாளர் மீதமுள்ள போட்டியாளர்களிடம் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும். உதாரணமாக 'நிழல்" என்றுச் சொன்னால் இருட்டு என்று அர்த்தம். பின்பு விளையாடும் குழந்தைகள் அனைவரும் ஒன்றுச் சேர்ந்து வெளிச்சமான பகுதியில் நின்றுக்கொள்ள வேண்டும்.
அதே மாதிரி முதல் போட்டியாளர் வெயில் என்றுச் சொன்னால், உடனே 'இருட்டான" பகுதிக்கு அனைவரும் சென்று நின்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு போட்டியாளர்கள் ஓடிக் கொண்டிருக்கும்போது முதல் போட்டியாளர்கள் அவர்களை தொடுவதற்கு முயற்சி செய்வார்.
விளையாடும் போட்டியாளர்கள் இருட்டான பகுதிகளில் நிற்பதற்கு பதிலாக வெளிச்சமான பகுதியில் மாறி நின்றாலோ அல்லது இருட்டான பகுதியில் நிற்பதற்கு ஓடும் போது முதல் போட்டியாளர் அவர்களை தொட்டுவிட்டாலோ 'அவுட்" ஆகிவிடுவார்கள்.
பின்பு 'அவுட்" ஆனவர் முதல் போட்டியாளராக மாறி மீண்டும் இதே மாதிரி விளையாட்டை தொடங்க வேண்டும்.
வெளிச்சமும், இருட்டும் மாறிமாறி வருவது போல், இந்த விளையாட்டை விளையாடும் போது போட்டியாளரின் குரலொளிகள் ஆரவாரமாக உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக