இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மழைக்கு இதமாக சுடச் சுட சுட்டு சாப்பிடுங்கள்..!
மழைக்கு இதமாக
மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இந்த பருப்புப் போளியை
செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு - ஒரு கப்
- உப்பு - 1/4 tsp
- பாகு தயாரிக்க
- வெல்லம் - 1 1/2 கப்
- தண்ணீர் - 1/4 கப்
- மைதா மாவு - 2 கப்
- மஞ்சள் - ஒரு சிட்டிகை
- உப்பு - 1/4 tsp
- நெய் - 1 tsp
- எண்ணெய் - 2 tsp
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- வாழை இலை - மாவு திரட்டுவதற்கு ஏற்ப
செய்முறை :
கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பைக் கொட்டி கால் கப் தண்ணீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.
வெல்லப்பாகு தயாரிக்க பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீர் சேர்த்து உருக விடவும். உறுகியதும் வடித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லத்தை கொட்டி அதோடு வேக வைத்த பருப்பை நன்கு மசித்து அதில் கொட்டிக் கிளறவும். அதோடு துருவிய தேங்காய் சேர்த்துக்கொள்ளவும். வெல்லமும் பருப்பும் நன்கு கலந்து சற்று கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அணைத்துவிடவும்.
மாவு பிசைய மைதா மாவு, மஞ்சள், உப்பு , நெய் ஊற்றி பிசைந்துகொள்ளவும். அதோடு இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசையவும். மாவு இலகிய பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் மென்மையாக இருக்கும்.
பிசைந்த மாவை கால் மணி நேரம் மூடி ஊற வைக்கவும்.
பின் வாழை இலையில் எண்ணெய் தடவில் அதில் பிசைந்த மைதா மாவை தட்டி அதோடு கடலைப் பருப்பையும் உருண்டையாகப் பிசைந்து அதில் வைத்து உருட்டிக்கொள்ளவும். பின் விரல்களால் தட்டையாக தட்டிக் கொண்டே இருங்கள்.
உங்களுக்கு தேவையான பதத்தில் தட்டையாகத் தட்டிக்கொள்ளவும். பின் அதை அப்படியே எடுத்து தோசைக் கல்லில் போட்டு நெய் தடவி வாட்டி எடுக்கவும்.
மிதமான சூட்டில் வாட்டி எடுக்க வேண்டும். சுவையான பருப்பு போலி தயார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக