இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
புராணங்கள்
படி ராமேஸ்வரத்தில் சீதா தேவி திரேதாயுகத்தில் பிடித்து வைத்த லிங்க ஸ்வரூபம் தான்
இராமநாத சுவாமி. இந்தியாவின் பன்னிரெண்டு ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்று.
12
ஜ்யோதிர் லிங்கங்களில் காசிக்கு அடுத்தபடியாக மிகவும் விசேஷமானது இந்த
"இராமநாத சுவாமி" ஜ்யோதிர்லிங்கம். முன்னால் ஜனாதிபதி "அப்துல்
காலாமே" இந்த ஈஸ்வரனை தனது "அக்னிச் சிறகுகள்" என்ற சுய சரிதையில்
(ஒரு முஸ்லிமாக இருந்தாலுமே கூட, பெரும் தன்மையுடன்) பெருமை படுத்தி எழுதி
உள்ளார். சரி அப்படி என்ன தான் இந்த ராமேஷ்வர ஜ்யோதிர் லிங்கம் விஷேசமானது.
வாருங்கள் அதையும் தான் பார்ப்போம்.
பொதுவாக
காசியில் இறக்கும் நிலையில் உள்ள ஆத்மாக்களுக்கு. அவர்களது கடைசி மூச்சு பிரியும்
போது. சிவனே அவர்கள் காதில் இராம நாமம் சொல்வாராம். ஆனால் இராமேஸ்வரத்தைப்
பொருத்தவரை, சீதா தேவி பிடிக்க, அந்த ராமனே பூஜித்த லிங்கம். ராமன் பாதம் பட்ட
இடம். அதனால், இராமேஸ்வரம்.
இன்னும்
கூட இராமர் பாதம் பட்ட இடம் என்பதால். அங்கு மண்ணை உழ மாட்டார்கள் (அதாவது அங்கு
உழவுத் தொழில் கிடையாது. அவ்வாறு மண்ணை உழுது விவசாயம் செய்வது அந்த மண்ணில்
பாவத்தை விளைவிக்கும் என்று கருதப்படுகிறது , காரணம் அது ராமரின் கால் பட்ட இடம்.
அது போல, மண் பாண்டத் தொழிலை அந்த ஊரில் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படி செய்ய
முற்பட்டு முயற்சி செய்த நாத்திகர்கள் பலர், இருந்த இடம் தெரியாமல் போய்
உள்ளார்கள்). ஏன், செக்கு இழுத்தல் கூட அந்த ஊரில் பாவமான செயல் தான். இப்படிப்
பட்ட ராமேஸ்வரத்தை நாமும் வணங்குவோமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக