இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோ என்றால் 'பசு' என்று பொருள். முக
என்றால் 'முகம்'. அதாவது பசுவின் தோற்றத்தை ஒத்து இருப்பதால் இதற்கு கோமுகாசனம்
என்று பெயர்.
செய்முறை:
- முதலில் தரையில் கால்களை நீட்டி நிமிர்ந்து உட்காரவும்.
- முதுகுப்பகுதியானது நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். வளைந்து இருக்க கூடாது.
- பின்னர், வலது காலை மடித்து இடது தொடையின் வெளிப்பக்கம் வைக்க வேண்டும். பாதமானது தரையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
- பின்னர், இடது காலை மடித்து வலது புட்டத்திற்கு கீழே வைத்து, அதன் மீது உட்கார வேண்டும்.
- பின்னர், இடது கையை மடித்து நடு முதுகில் வைக்கவும். இப்பொழுது வலது கையை தலைக்கு மேலே உயர்த்தி பின் முதுகுப் பக்கம் வளைக்கவும்.
- இப்பொழுது இடது கை விரல்களோடு, வலது கை விரல்களை கோர்த்து பிடித்துக்கொள்ள வேண்டும்.
- முதுகுப்பகுதி நிமிர்ந்து இருக்க, இடது கையை மேல் நோக்கியும் வலது கையை கீழ் நோக்கியும் பிடியை தளர்த்தாமல் பிடித்திருக்க வேண்டும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும். இதே நிலையில் குறைந்தது அரை நிமிடம் வரை இருக்கவும்.
- கழுத்தையும், தலையையும் சாய்க்காமல் நேராக வைத்து, நேராக பார்க்க வேண்டும்.
- பின்னர், மெதுவாக கைகளை தளர்த்தி இயல்பான நிலைக்கு வர வேண்டும்.
- இதே போல, கால்களையும் கைகளையும் மாற்றி மீண்டும் செய்யவும்.
பலன்கள்:
- மார்புப்பகுதி நன்றாக விரிவடைவதால் நல்ல தோற்றத்தை கொடுக்கிறது.
- தொடர்ந்து செய்த்து வர கூனல் முதுகு நேராகிறது.
- கால் சுளுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- முழங்கால் மூட்டுகளில் தோன்றும் இறுக்கத்தை போக்கி நிவாரணம் கிடைக்கிறது.
- தோள்மூட்டு, மற்றும் கழுத்துப் பகுதிகளில் தோன்றும் தசைப்பிடிப்பை போக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக