இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜம்மு
காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்ட விவகாரம் இந்திய பங்குசந்தைகளில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியது.
ஜம்மு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக
மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், அந்த மாநிலம் 2 யூனியன்
பிரதேசங்களாக பிரிக்கப்படுவுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான
அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் இன்று
அறிவித்தார்.
குடியரசுத்
தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலின் கீழ் இந்த உத்தரவு
பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு
சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கான குடியரசு தலைவரின்
அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பான
அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிவித்தவுடன் இந்திய
பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 550
புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 500 புள்ளிகளில் நிலைக் கொண்டது. இதேபோன்று தேசிய
பங்குசந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 150 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 800
புள்ளிகளில் நிலைப்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக