இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்று இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது பல சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. சட்டப்பிரிவு 370 என்றால் என்ன, அதனை நீக்குவதால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு என்ன பாதிப்பு ஏற்படும் எனப் பார்ப்போமா?
சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதால்
ஏற்படவுள்ள நன்மைகள், தீமைகள் என்னென்ன?
இன்று
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35-ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள்
ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை
அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து
செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசு இதற்கான அறிவிப்பாணையை
வெளிட்டுள்ளது.
HM Amit Shah in Rajya Sabha: Under the umbrella of
Article 370 three families looted J&K for yrs. Leader of Opposit…
https://t.co/jTqg5awB42
— ANI (@ANI) 1564986709000
சரி!
சட்டப்பிரிவு 370 என்றால் என்ன, அதனை நீக்குவதால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு
என்ன பாதிப்பு ஏற்படும் எனப் பார்ப்போம். 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை
அடைந்தபோது, ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு &
காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன்,
ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் 1949-இல் இணைக்க சம்மதித்தார்.
ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் அனுமதி இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையா சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம். இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது.
காஷ்மீரை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானும் சீனாவும் பிரிக்காமல் இருக்கவே நேரு இந்த சிறப்பு சலுகைகளை அறிவித்தார். ஆனால் பாஜக அரசு நேரு செய்தது தவறு, அதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இச்சட்டம் நீக்கப்பட்டால் காஷ்மீர் மக்களும் சராசரி இந்திய குடிமக்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர், லடாக் என பிரிக்கப்பட்டதால் யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். அதேசமயம் அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான முடிவான இந்த சட்டப்பிரிவு நீக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் தலைவர்கள் மத்தியில் பல்வேறு மாற்றுக்கருத்துகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
சாதகங்கள் என்னென்ன?
- சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா பேசுகையில், ’இனி இந்திய அரசால் காஷ்மீரின் எல்லைகளை மாற்றி அமைக்க முடியும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இட இதுக்கீடு வழங்கமுடியும்.
- மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிற மாநிலத்தைச் சேர்ந்த ஆணை மணந்துகொண்டால் அந்த பெண்ணின் ஜம்மு காஷ்மீர் சொத்துக்கள் பறிக்கப்படும் என்ற நிலை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
- மேலும் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதால் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது. காஷ்மீருக்கு என இனி தனிக்கொடி கிடையாது. எந்த ஒரு மத்திய அரசு சட்டத்தையும் இனி காஷ்மீர் அரசு அனுமதி இல்லாமல் மற்ற மாநிலங்கள் போல அமல்படுத்த முடியும்.
- லடாக் பகுதி பல உலக சுற்றுலா பயணிகளைக் கவரும். ஆகவே இனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக் பகுதியில் சுற்றுலாத்துறையை வளர்த்து அதன்மூலம் மாநிலத்துக்கு அதிகமான நிதி ஒதுக்கலாம்.
- மேலும் பல தனியார் நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்ய ஆயத்தமாகும். இதனால் அந்த மாநிலத்தில் சென்னை, மும்பை, டெல்லி போல நகரமயம் ஆகும். வேலை வாய்ப்பு பெருகும். தொழிற்சாலைகள் உருவாகும்.
பாதகங்கள் என்னென்ன?
- முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் அப்போதைய காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கும் ஏற்பட்ட ஒருமனதான கருத்தின் காரணமாக வழங்கப்பட்டது இந்த சிறப்பு அந்தஸ்து. இதற்கு அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஒப்புதல் அளித்தார்.
- இதனை நீக்குவதால் சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் லடாக் பகுதி காஷ்மீருக்கு சீனாவிடம் இருந்து அச்சுறுத்தல் வரலாம். ஏற்கனவே சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அவ்வப்போது லாடாக் வான்பரப்பில் பறந்து வருகின்றன.
- பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் பதற்றம் அதிகரிக்கக்கூடும். மேலும் அங்கு உள்ள காஷ்மீர் வாசிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகலாம்.
- தொழில் நிறுவனங்கள் இனி நில ஆக்கிரமிப்பு செய்யலாம். இது அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.
- வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் இனி காஷ்மீரில் சொத்து வாங்க முடியும். அரசு வேலையும் பார்க்கலாம். இதனால் அங்கு ஜனத்தொகை அதிகரிக்கலாம். இது பிரிவினைவாதிகளையும் பயங்கரவாதிகளை கோபத்துக்கு ஆளாக்கலாம்.
- காஷ்மீரை தனி நாடாக அறிவிக்க அப்பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என நேரு அரசால் உறுதியளிக்கப்பட்டு அது இத்தனை ஆண்டுகளாக தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக