இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கொசு வத்திச் சுருள், லிக்குவிட் என கெமிக்கல்கள் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கொசுவை விரட்டலாம்.
மழைக்காலம் வந்தாலே கொசுவும்
கூடவே வந்துவிடும். எதை வேண்டுமானாலும் சமாளித்துவிடலாம். கொசுத்தொல்லையை சமாளிக்கவே
முடியாது. விளம்பரங்களில் கூட அந்த மூலையை சுத்தம் செய்ய 2 லட்சம் இந்த மூலையை சுத்தம்
செய்ய ஐந்து லட்சம் என வீட்டு உரிமையாளரிடம் பேரம் பேசுவார். காரணம் கேட்டால் அந்த
மூலைகளில் கொசுக்கள் இருக்கும் என்பார். ஆக இந்தக் கொசுக் கடி தொல்லை அவ்வளவு இம்சையை
அளிக்கவல்லது. நீங்களும் அப்படி அனுபவிக்கிறீர்கள் எனில் இந்த குறிப்புகளை செய்து பாருங்கள்.
வேப்பிலை மற்றும் லாவண்டர் எண்ணெய்
: பல ஆய்வுகளில் வேப்பிலை கொசுக்களை ஒழிக்க சிறந்தது என நிரூபித்துள்ளனர். கொசுவத்திகள்,
லோஷன் போன்ற பொருட்களிலும் வேப்பிலை ஃப்ளேவர்கள் உண்டு. எனவே வேப்ப எண்ணெயுடன் சம அளவு
லாவண்டர் எண்ணெயும் கலந்து கை , கால் போன்ற இடங்களில் தடவிக் கொண்டால் கொசு உங்களை
நெருங்கவே நெருங்காது.
எலுமிச்சை மற்றும் கிராம்பு
: எலுமிச்சையை இரு துண்டுகளாக நறுக்கி அதில் கிராம்பு முனைகளை செருகுங்கள். இதனால்
கொசுக்கள் அகலும். பாலிவுட் நடிகர் அக்ஷை குமார் இதை முயற்சி செய்து பார்த்து வெற்றி
அடைந்ததால் இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கும் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது
துளசி : துளசி வாசனை கொசுக்களுக்கு
பிடிக்காது என்பதால் உங்கள் படுக்கைக்கு அருகில் துளசி இலை, கிளைகளை பிடிங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இதனால் கொசுத்தொல்லையை தவிர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக