இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சுகன்யா, எப்ஸியா இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்தபோது, இருவருக்கும் இடையே, நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறியந்த சுகன்யாவின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர். இதையடுத்து சில வருடங்களுக்கு பிறகு, சுகன்யாவுக்கு வேறொரு ஆணுடன் திருமணமானது.
மதுரை அருகே, பள்ளித்தோழி மீது
கொண்ட காதல் காரணமாக, பெண் ஒருவர் தனது கணவனையும், ஆறு வயது மகளையும் தனியே தவிக்கவிட்டுச்
சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் சுகன்யா. இவருக்கு, கடந்த 2012-ம் ஆண்டு ராமநாதபுரம் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் திருமணமாகியது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளனர். இந்நிலையில் ராஜேஷூக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் சரிவர எழுந்து நடக்க முடியவில்லை. இதனால், அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக, சுகன்யா மதுரைக்கு சென்ற போதுதான் குடும்பத்தில் குழப்பம் ஆரம்பமானது. ஏற்கெனவே மனமுடைந்து இருந்த சுகன்யா, அங்கு தனது பள்ளித்தோழி எப்ஸியாவை சந்தித்தார்.
சுகன்யா, எப்ஸியா இருவரும் மதுரை பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்றாக படித்தனர். வகுப்புத் தோழிகளான இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். விடுமுறை நாட்களில் ஒன்றாக வெளியே சுற்றித் திரிந்தனர். இந்நிலையில்தான், ஆணாக மாற தொடங்கிய எப்ஸியாவுக்கு சுகன்யா மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. சுகன்யாவும் எப்ஸியா மீது காதல்வயப்பட தொடங்கினார்.
இதையறியந்த சுகன்யாவின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர். அதன்பிறகு இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சில வருடங்களுக்கு பிறகு, சுகன்யாவுக்கு வேறொரு ஆணுடன் திருமணமானது.
இத்தகைய சூழலில்தான், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, சுகன்யா மீண்டும் எப்ஸியாவை சந்தித்தார். பிரிந்து சென்ற இருவரும் மீண்டும் மனம் விட்டு பேசி, ஒருவருக்கொருவர், செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு மீண்டும் தங்களது பழைய உறவை தொடர்ந்தனர்.
அப்போது சுகன்யா கணவர் விபத்தில் ஊனமடைந்து இருப்பதைக் குறித்தும், தான் குடும்பத்தில் அனுபவிக்கும் சோதனைகள் குறித்தும் எப்ஸியாவிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்ட எப்ஸியா, சுகன்யாவை தன்னுடன் வந்து சேர்ந்து வருமாறு அழைத்துள்ளார்.
குடும்ப வாழ்க்கையை வெறுத்த சுகன்யாவுக்கு, எப்ஸியாவின் வார்த்தை ஆறுதல் அளித்தது. விபத்தில் ஊனமுற்ற கணவரையும், 6 வயது பெண் குழந்தையையும் தனியே தவிக்கவிட்டு, சுகன்யா எப்ஸியாவுடன் கரம் கோர்த்தார். குடும்ப வாழ்க்கைக்காக, எப்ஸியா தனது பெயரை, ஜெய்ஸன் ஜோஸ்வா என்று மாற்றிக் கொண்டார். மேலும், அறுவை சிகிச்சைகள் செய்து தன்னை திருநம்பியாக மாற்றிக் கொண்டார்.
மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து, இருவரும் ஒன்றாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். மதுரையிலுள்ள தனியார் மாலில் சுகன்யா வரவேற்பாளராகவும், ஜோஷ்வா காவலாளியாகவும் பணியாற்றி வந்தார். இதனிடையே, சுகன்யாவின் பெற்றோர், அவரது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மீண்டும் திரும்பி வருமாறு அழைத்தனர். ஆனால் சுகன்யா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். தனது மகளை மட்டும் தன்னுடன் ஒப்படைக்குமாறு ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த இரு வாரங்களுக்குன் முன் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக சுகன்யா மற்றும் அவரது தற்போதைய கணவன் ஜெய்ஸன் ஜோஸ்வா இருவரும் கேணிக்கரை காவல்நிலையம் வந்தனர். ஆனால், சுகன்யா முறையற்ற வாழ்க்கை வாழ்வதால், அவரிடம் குழந்தையை ஒப்படைக்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால், நீதிமன்றம் சென்று வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசார் சுகன்யாவுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக