Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

திடீர் என்று கரண்ட் ஷாக் அடித்துவிட்டதா? அப்போ உடனடியாக இதை செய்யுங்கள்

 Image result for ஷாக் அடித்து விட்டதா

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

இன்றைய காலத்தில் மின்சாரத்தின் பாவனை மிக அதிகமாகவே உள்ளது. மின்சாரம் இல்லை என்றால் எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது என்றே சொல்லாம்.
அதே போல இந்த மின்சாரத்தின் மூலம் ஆபத்துக்கள் ஏற்படுவதும் வழமை. மின்சாரத்தின் தாக்கம் என்பது எத்தனை அளவு வோல்ட்டேஜ் உள்ளது என்பதைப் பொருத்தும், நமது உடலில் பாயும் மின்சாரத்தின் மின்தடை திறனை வைத்தும் தான் ஆபத்துக்கள் அமைகிறது.
ஆனால் குளியல் மற்றும் சமையல் இது போன்ற ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் அறைகளில் மின்சாரம் தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தாகும். ஏனெனில் ஈரத்தில் மின்சாரத்தின் திறன் அதிகமாக இருக்கும்.
எனவே மின்சார விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது நன்றாக யோசித்து, மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும்.
மின்சாரம் தாக்கியவருக்கு முதலுதவி செய்வது எப்படி?
மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக் கொண்டு இருந்தால், முதலில் கையில் ரப்பர் கை உறையை அணிந்துக் கொண்டு மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்து மின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லது ப்ளக் கட்டையை எடுத்து, மின் கம்பியைத் துண்டித்து மின் ஓட்டத்தைத் தடை செய்ய வேண்டும்.
உயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர் கம்பியைத் தொடாத நிலையில் கிடந்தாலும் அவரை நெருங்குவதோ, நேரடியாகத் தொட்டுத் தூக்குவதோ கூடாது. அதற்கு முதலில் மின் ஓட்டத்தை நிறுத்தி, நீண்ட உலர்ந்த மரக் கம்பு அல்லது கயிறு மூலம் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும்.
இதயத் துடிப்பு தடைபட்டு இருந்தால், மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயத்தைச் செயல்படத் தூண்டலாம். சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக