இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சனிக்கு மட்டும் தான் ஒரே சமயத்தில் மூன்று
ராசிகளை பிடிக்கும் ஆற்றல் உண்டு. சூரியன், சந்திரன், புதன், வெள்ளி (சுக்கிரன்)
ஆகிய இந்த கிரகங்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்த ஏழாம் இடத்தை மட்டும் தான்
பார்ப்பார்கள். ஆனால் சனி மட்டும் தான் ஒரே சமயத்தில் 3,7,10 ஆகிய பார்வைகளால்
தான் இருக்கும் இடத்தில் இருந்து மூன்று வீட்டைப் பார்ப்பார். இப்போது புரிகிறதா
சனியின் ஆற்றல்!
இதில் சனி சந்திரன் அல்லது ராசிக்கு,
ஒன்றாம் இடம் அல்லது ராசியிலேயே பிரவேசித்தால்
வியாதி வரும், அலைச்சல் வரும். அவர்களை பார்க்க யாருக்குமே பிடிக்காது. காரணமே
இல்லாமல் மற்றவர்கள் இவர்களை எரிஞ்சு விழுவார்கள். உடலில் இருக்கும் அழகும்
குறைந்து விடும். சிலருக்கு ரத்த சோகை ஏற்படும்.
இரண்டாம் இடத்திற்கு சனி வரும் சமயத்தில் தேவை
இல்லாத தனம் விரயம் ஆகும். பணம் கொடுக்க திரும்ப வராது. திருடர் பயம் தரும்.
திருடும் போகும் வாய்ப்பு உண்டு. பேச்சு தவறாக இருக்கும், காரணம் இந்த இடம் வாக்கு
ஸ்தானம் என்பதால்.
நான்காம் இடத்தில் சனி வரும் போது இருக்கும்
இடத்தையே காலி செய்து விட்டு போகவேண்டிய துர்பாக்கியத்தை தரும். பிறர் வாக்கிற்கு
கட்டுப்பட்டு சுதந்திரத்தை இழக்க வேண்டி இருக்கும்.
ஐந்தாம் இடத்திற்கு சனி வரும் சமயம்
புத்திரர்களால் மனக் கவலை, பிள்ளைகளுடன் சண்டை, செய்யாத தப்பிற்கு கெட்ட பெயர்,
ஞாபக மறதி போன்ற கெடுதல்களை தரும்.
எழில் வரும் சனி மனைவிக்கு கஷ்டத்தை வியாதியை
கொடுக்கும்.
எட்டில் வரும் சனி வியாதி, வறுமை, மருத்துவ
செலவு, விபத்துக்கள் கூட தரும்.
ஒன்பதில் வரும் சனி காரியத் தடை தரும்.
பெரியோர்களின் சாபத்தை தேடித் தரும்.
பத்தில் வரும் சனி தொழில் ரீதியாக ஒரு வார்தா
புயலை ஏற்படுத்தி விடும். திடீர் என மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பன்னிரெண்டில் வரும் சனி வீண் செலவை தரும்.
தூக்கத்தை குறைத்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக