Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now
Click here to join our WhatsApp channel
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019
உங்களது கூகுள் பே, பே டிஎம், போன் பே உள்ளிட்ட பேமெண்ட் கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
ஊர்க்கோடாங்கி
வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால்
கூகுள் பே, பே டிஎம், போன் பே, அமேசான் பே, ஏர்டெல் மணி போன்ற அனைத்து பேமெண்ட் செயலிகளும்
KYC அளிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேரடிப்பணப் பரிவர்த்தனைக்கு
மாற்றாக கூகுள் பே, பே டிஎம், போன் பே, அமேசான் பே, ஏர்டெல் மணி போன்ற பேமெண்ட் செயலிகள்
உள்ளன. வங்கியில் வரிசையில் நிற்கும் நேரம் மிச்சம் என்பதால், பலரும் பேமெண்ட் செயலிகள்
மூலமாக பணப்பரிவர்த்தனைகளை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஸ்மார்ட்போன்களின்
அதிவேக எழுச்சி ஆகியவற்றால் பேமெண்ட் செயலிகளின் தேவையும் அதிகரித்தது. அதற்கேற்ப பல
நிறுவனங்கள் போட்டிபோட்டு பேமெண்ட் வங்கிச் சேவையில் குதித்தன. தற்போது செல்போன் எண்
மட்டும் பதிவு செய்தால் பேமெண்ட் செயலிகளை பயன்படுத்தலாம் என்ற நிலை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக