இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கன்னியாகுமரியிலிருந்து ஏறத்தாழ 8கி.மீ தொலைவிலும், பத்மநாபபுரத்திலிருந்து 31கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 19கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு கோட்டைதான் வட்டக்கோட்டை.
சிறப்புகள் :
கன்னியாகுமரி கடலின் எழிலை ரசிக்க பல்வேறு இடங்கள் இருந்தாலும், கடலோரத்தில், அதுவும் அலைகளின் சீற்றத்திற்கிடையே கட்டப்பட்டுள்ள வட்டக்கோட்டையில் இருந்து கடலை ரசிப்பது தனிச் சிறப்பாகும்.
இந்தியாவின் தென் எல்லையான குமரிமுனையில் அமைந்துள்ள ஓர் அழகிய படைத்தளக் கோட்டைதான் வட்டக்கோட்டை.
திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல் வழியாக அன்னியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் படைவீடுகளுடன் இந்தக்கோட்டை 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
நுழைவு வாயிலில் திருவிதாங்கூர் அரசின் சின்னமான யானைச் சிலைகள் வரவேற்கின்றன. கோட்டைக்குள் கண்காணிப்பு அறை, ஓய்வறை ஆயுதச்சாலை ஆகியவையும் உள்ளன.
மண்டபத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் கி.பி 12ம் நூற்றாண்டில் இந்த கோட்டை பாண்டியர்களின் கைவசமிருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
கோட்டையின் மேல் பகுதியில் இருக்கும் அணிவகுப்பு மைதானத்திலிருந்து பார்த்தால் கடலின் கணநேர காட்சியை காணலாம்.
இந்தக் கோட்டையின் சில பாகங்கள் கடலுக்குள் அமைந்திருக்கிறது. கடலரிப்பை தாங்கும் வண்ணம் பெரிய பெரிய கருங்கற்களால் ஆன பாறைகள் கோட்டையை சுற்றி அரணாக போடப்பட்டிருக்கிறது.
இந்தக் கோட்டை இப்பொழுது பயணிகள் மிகவும் விரும்பும் சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. அமைதியான சூழ்நிலையில், ஒருபுறம் கடல் அலைகளின் காட்சியுடனும், மற்றொரு புறம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் காட்சியுடனும் அமைந்துள்ளது.
சுற்றுலா வருபவர்கள் கோட்டையின் இருபக்கமும் சுற்றி உள்ள கடற்கரையில் ஆனந்தமாக நீராடி மகிழலாம்.
எப்படி செல்வது?
கன்னியாகுமரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
தூத்துக்குடி விமான நிலையம்.
ரயில் வழியாக :
கன்னியாகுமரி ரயில் நிலையம்
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளது.
இதர சுற்றுலாத்தலங்கள் :
பத்மநாபபுரம் அரண்மனை.
திருவள்ளுவர் சிலை.
விவேகானந்தர் பாறை.
திற்பரப்பு அருவி.
மாத்தூர் தொட்டிப்பாலம்.
பேச்சியாறு அணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக