இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நம்முடைய முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவார். உலகிலே அதிகமாக அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த நிறம் மாறும் சிவலிங்கம், இக்கோவில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோவில் தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர். கோவில் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.
மூலவர் - பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது.
ஒருநாளில், ஆறு நாழிகைக்கு ஒருமுறை - ஒருநாளில் ஐந்துமுறை நிறம் மாறுகின்றது. இதனால்தான் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் வழங்குகின்றது.
தினமும் இந்த கோவிலின் மூலவர் தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகத பச்சை, தவிர, குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக காட்சியளிக்கிறார்.
காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49 க்கு உருகிய தங்க நிறம், மாலை 3.36 க்கு மரகத பச்சை நிறத்தில் இந்த லிங்கம்மாறுகிறது. பிறகு மாலை 6.00 மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காட்சியளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக