Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 10 ஆகஸ்ட், 2019

காகம் சொல்லும் சகுனங்கள்



Image result for காகம் சொல்லும் சகுனங்கள்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



நமது இறந்த முன்னோரின் அம்சமாக திகழ்வது காகங்கள். அத்தகைய காகங்கள் கரைந்தால் ஏற்படும் சகுனங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

 பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தைக் குறிக்கும். இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தை உண்டாக்கும்.

 பயணிக்கும் போது காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.

 ஒரு காகம் மற்றொரு காகத்துக்கு உணவூட்டும் பார்த்தால், செல்லும் பயணம் இனிதாகும்.

 காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.

 யாத்திரை செல்ல புறப்படும்போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையில் லாபம் பயணத்தில் கிட்டும்.

 பெண் ஏந்தியுள்ள குடத்தின் மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால், தனலாபம் உண்டாகும். அந்தக் குடத்தின் மீது காகம் எச்சமிட்டால், நல்ல உணவு கிடைக்கும்.

 காரணமின்றிக் கரையும் காகம், பஞ்சம் வரப் போவதை குறிக்கும். காகம் நெல் போன்ற தானியங்களை அள்ளிச் சென்று சேமிப்பது, பஞ்சம் வரும் என்பதற்கான அறிகுறியாகும்.

 காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையை குறிக்கும்.

 பூஜை செய்வது போல் காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால், பயணத்தால் பலவிதமான தனலாபம் ஏற்படும். வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது எச்சம் இட்டால், பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது.

 நல்ல மரங்களில் காகம் கூடு கட்டுவது நற்பலனையும், பட்டுப்போன, எரிந்துபோன மரங்களில் கூடு கட்டுவது வரப்போகும் துன்பத்தையும் குறிக்கும்.

 பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் இட, அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண் குழந்தை பிறக்கும்.

 பல காகங்கள் கரைந்து கொண்டு கூட்டமாக ஒரு ஊரின் மேலாகப் பறப்பது, அவ்வூருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும்.

 சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும்.

 பால் உள்ள மரங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் இருந்து கொண்டு காகம் கரைவது, நல்ல மழை உண்டு என்பதற்கான சகுனம்.

வெளியில் செல்லும் போது, ஆண் மற்றும் பெண் காகங்கள் ஒன்றாக இருந்து கரைந்து கொண்டிருந்தால், அவர்களின் வீட்டில் பெண்களின் சேர்க்கை ஏற்படுமாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக