இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஓரம் கப்பல் போக்குவரத்து அதிகமாக இருக்கும். பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். மேலும், அந்த விளக்கு எண்ணெயால் எரியக் கூடியது.கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தார். வாரம் ஒரு முறை கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணெயை கப்பல் நிறுவனங்கள் அவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தன.
அந்த காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கை காப்பது மற்றும் விளக்கு அணையாமல் பார்த்துக் கொண்டிருப்பது மட்டும்தான். அதன்படி எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.
கடுங் குளிர்காலம் வந்த போது, ஒரு நாள் இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தார். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.
அவர் அந்த காப்பாளனிடம், தம்பி! என் வீட்டில் விளக்கு எரிய எண்ணெய இல்லை. குளிரால் எனக்கு நடுக்கமாக உள்ளது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணெய் கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று கெஞ்சினார்.
மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணெய் கொடுத்தனுப்பினார். அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவை யாரோ தட்டினார்கள். கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன்.
அண்ணே! பக்கத்து ஊரில் உங்களின் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் பாராட்டி பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். என் கை விளக்கில் எண்ணெய் தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணெய் கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று பணிவாக பேசினான்.
காப்பாளனும் அவனுக்கு எண்ணெய் கொடுத்தனுப்பினார். மூன்றாம் நாளும் மூதாட்டி ஒருவர் கதவைத் தட்டினார். ராஜா! நீ நல்லாயிருக்கணும். வீட்டில் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணெய் தீர்ந்து போய் விட்டது. எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்திற்கு கடவுள் போல் கை கொடுத்து உதவணும் என்றார். அதனால், அவருக்கும் காப்பாளன் எண்ணெயை கொடுத்துவிட்டார்.
வாரக் கடைசி நாள் வந்துவிட்டது. அடுத்த வாரத்திற்கான எண்ணெயை கொண்டு வரும் வண்டி இன்னும் வரவில்லை. காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணெய் நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தார். அவர் பீப்பாயில் இருந்த எண்ணெய் விளக்கைச் செலுத்தப் போதாது என தெரிந்து கொண்டார். இருந்த எண்ணெயயை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஓடினார்.
மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணெய் தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டார். ஆனால் யாரும் முன்வரவில்லை. எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.
வாரக் கடைசியில் இரவில் எண்ணெய் தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.
மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் இருந்து தவறிய காப்பாளன், இப்போது பல பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக