Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 10 ஆகஸ்ட், 2019

அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோவில்-கோயம்புத்தூர்

Image result for அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி அம்மன் திருக்கோவில்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் மற்றும் உடலில் உண்டாகும் பலவித நோய்களை தீர்க்கும் மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் ஆலயம் கோயம்பத்தூர் மாவட்டம் நவகரை என்னும் ஊரில் உள்ளது. இத்தலத்தின் வரலாறு, தலச்சிறப்பு, பிரார்த்தனை, நேர்த்திக்கடன் பற்றி தெரிந்து கொள்வோம்.

மூலவர் : மலையாள தேவி துர்காபகவதி அம்மன்

தல விருட்சம் : விருச்சிக மரம்

பழமை : 500 வருடங்களுக்குள்

ஊர் : நவகரை

மாவட்டம் : கோயம்புத்தூர்

தல வரலாறு :

ஒரு காலத்தில் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுப்பதில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியில் தேவர்கள் அமுதத்தை அருந்த வேண்டி, மலையாள தேசத்தில் உள்ள நவகரை என்னும் ஊரில் உலகை ஆளும் மலையாள தேவி துர்கா பகவதி அம்மனை வேண்டி யாகம் செய்தனர்.

தேவர்கள் செய்த யாகத்தில் மகிழ்ந்து, யாகத்தில் இருந்து பகவதி அம்மன் தோன்றி, தேவர்களையும் மனிதர்களையும் காக்கும்படி சிவனுக்கும், மகா விஷ்ணுவிற்கும் கட்டளையிட்டாள். பகவதி அம்மனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக சிவனும், விஷ்ணுவும் கிளம்பினர். அப்போது அங்கு வந்த சிவனின் வாகனமான நந்தி, அவர்களிடம் பெருமானே! அன்னை பகவதியின் தரிசனம் உங்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. சிவ வாகனமான எனக்கு கிடைக்கவில்லையே என வருந்தியது.

உடனே மகா விஷ்ணு, நந்தியே! நாங்கள் கண்ட காட்சியை நீயும் கண்டு மகிழ்வாய் என்று கூறினார். அதைக்கேட்ட நந்தி மகிழ்ச்சியுடன் பூமியின் வெளிப்பகுதியில் கொம்பு தெரியும் அளவிற்கு மாபெரும் வடிவம் எடுத்தது.

நந்தியின் மாபெரும் வடிவத்தைக் கண்ட மகா விஷ்ணு குறுக்கிட்டு, நந்தீஸ்வரா, நீ சாந்தமாகி மண்டியிட்டு பூமியை நோக்கி உற்றுப்பார் என்றார். நந்தியும் அந்த இடத்தில் இருந்துகொண்டு மகா விஷ்ணு கூறியபடியே பூமியை நோக்கி உற்று பார்த்தது. அப்போது சிவனுக்கும், மகா விஷ்ணுவிற்கும் பகவதி அம்மன் காட்சி கொடுத்தாள். அந்த காட்சி நந்தீஸ்வரருக்கும் தெரிந்தது.

நந்தி, பகவதி அம்மனின் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த சனிபகவான் மகிழ்ந்து தன்னை மறந்து, தனது வலது காலை தூக்கி காகத்தின் மீது வைத்து நின்றார். சனிபகவான் தனது வலது காலைத் தூக்கி காகத்தின் மீது வைத்து நிற்கின்ற காட்சியை காணும் பக்தர்கள், நெய் விளக்கேற்றி வலது புறமாக என்னை சுற்றி வழிபட்டால், ஏழரை நாட்டு சனி, செவ்வாய் தோஷம் மற்றும் சகல தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும் என்றார்.

தல பெருமை :

ஒருமுறை ஆதி சங்கரர், இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை வரும் வழியில் திருப்பத்தூரில் விருச்சிக மரத்தை பிரதிஷ்டை செய்தார். அந்த விருச்சிக மரம் இத்தலத்திலும் உள்ளது. இந்த மரத்தை வழிபட்டால் சிவனை நேரில் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தக்கோவிலை உருவாக்கிய ராமானந்த மூர்த்தி சுவாமிகள் இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

பிரார்த்தனை :

இங்கு கன்னிமாதிசையில் குருவும், கேதுவும், சிவனும் கூடிய கன்னி சர்ப்பம் உள்ளது. இதை வணங்குபவர்களுக்கு அனைத்து சுபகாரியங்களும் சித்தியாகும். இங்குள்ள பகவதி அம்மனை செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

நேர்த்திக்கடன் :

ஒவ்வொரு சித்ரா பவுர்ணமியன்றும் மலையாள தேவி துர்கா பகவதி அம்மனின் திருவுருவில் சாத்தப்பட்ட சந்தனத்தை பிரசாதமாக கொடுக்கின்றனர். பலவித மூலிகைகளால் செய்யப்பட்ட இந்த சந்தனத்தை உட்கொண்டால் பலவித நோய்கள் தீரும் என்று மக்கள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக