இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முதுகெலும்புக்கு நன்கு வளையும்
தன்மையை கொடுக்க செய்யப்படும் ஆசனம் வக்ராசனம்.
செய்முறை:
- முதலில் இரண்டு கால்களையும் தரையில் முன்புறமாக நீட்டி நேராக நிமிர்ந்து உட்காரவும்.
- பின்னர் வலது காலை மடித்து பாதத்தை இடது முழங்காலை தொடும்படி வைக்கவும்.
- பின் மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி இடது கையை வலது முழங்காலுக்கு மேல் கொண்டு வந்து வலது கணுக்காலை பிடிக்கவும்.
- வலது கை முதுகின் பின்புறம் தரையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
- இப்பொழுது மூச்சை வெளிவிட்டபடி உடலை வலது புறம் திருப்பி பின்னோக்கி பார்க்கவும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும்.
- இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் அல்லது 20 வினாடிகள் இருந்துவிட்டு பின் மெதுவாக இயல்பு நிலைக்கு வரவும்.
- இதே போன்று இடது புறமும் செய்ய வேண்டும்.
பலன்கள்:
- சர்க்கரை நோய், மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு இது மிகச் சிறந்த ஆசனம்.
- மலச்சிக்கல், மற்றும் அஜீரணம் போன்ற தொல்லைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- பக்கவாட்டில் உடல் திரும்புவதால் முதுகெலும்பு நன்கு வளையும் தன்மையுடன் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக