இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகளின் ரிப்போர்ட் கார்டுகள் உள்பட அவர்களின்
பள்ளி வருகை பதிவேடு போன்றவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தமிழக
பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது. தமிழக பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை
மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய நடைமுறைகளை புகுத்தி வரும் பள்ளிக்
கல்வித்துறை, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் வழங்கி,
புதிய முறையில் மாணவ மாணவிகளுக்கு எளிதில் புரியும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸ்மார் வகுப்பறைகள் தொடங்கப்பட்டு, இணையம் மூலமும், கியூஆர் கோடு மூலமும் பாடங்களை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாணவர்களின் மதிப்பெண் ரிப்போர்ட் கார்டுகள் இனி அட்டைகளில் எழுதி அனுப்புவதற்கு பதில், இணையத்தில் பதிவேற்றம் செய்து,
அதன்மூலம் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. எற்கனவே மாணவ மாணவிகளின் அங்க அடையாளங்கள், ஆதார் எண் மற்றும் ரத்தப்பிரிவு உள்பட அவர்களின் முழு விவரமும் ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், தற்போது ரிப்போர்ட் கார்டு,
வருகை பதிவேடு போன்றவையும் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த சேவை பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சில தனியார் பள்ளிகள் இதை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக