Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

குடும்பத்தை பிரித்த லட்டு, உ.பி-யில் நடந்த சுவாரஸ்ய கதை!

குடும்பத்தை பிரித்த லட்டு, உ.பி-யில் நடந்த சுவாரஸ்ய கதை!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



மந்திரவாதி பேச்சை கேட்டு, தனது மனைவி தனக்கு சாப்பிட லட்டு மட்டுமே கொடுப்பதாக விவாரகரத்து கோரியுள்ளார்!
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் நபர் ஒருவர்., தனது மனைவி மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு தனக்கு சாப்பிட லட்டு மட்டுமே அளிப்பதாக கூறி விவாகரத்துகோரியுள்ளார். மேலும் இவருக்கு சாப்பிட வேறு எதுவும் அவரது மனைவி கொடுப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக குடும்ப நீதிமன்றத்தை அணுகியுள்ள கணவர், நீதிமன்றத்தில் 'மந்திரவாதி' அறிவுறுத்தலின் பேரில், தனது மனைவி காலையில் சாப்பிட நான்கு லட்டுக்களையும், மாலை நான்கு லட்டுகளையும் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் வேறு எதையும் சாப்பிட அவருக்கு அளிப்பதில்லை எனவும், தானாக சாப்பிடவும் அனுமதிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன, தங்களது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இத்தம்பதியருக்கு இடையே இவ்வாறான சிக்கல் ஏற்பட காரணம் என்ன என்று விசாரிக்கையில்., கணவர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், கணவரின் உடல் நிலையை சரியாக்க அவரது மனைவி 'மந்திரவாதி' உதவியை அணுகியதாகவும், மந்திரவாதி தனது கணவரை லட்டுக்களை மட்டுமே சாப்பிடச் சொன்னதாகவும் தெரிகிறது. மந்திரவாதியின் வாக்கை பின்பற்றி வந்த மனைவி, கணவருக்கு லட்டுகளை மட்டுமே உணவாக அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவாகரத்து வழக்கை விசாரித்த அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து தம்பதியரை கவுன்சிலிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களை கவுன்சிலிங் செய்த மருத்துவர் தெரிவிக்கையில்., "நாங்கள் இருவரையும் கவுன்சிலிங்கிற்கு அழைத்தோம். குற்றம்சாட்டப்பட்ட மனைவி தனது கணவர் குணமடைய லட்டு தான் முக்கிய காரணம் என உறுதியாக நம்புகிறார். இல்லையென்று கூறினால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்" என தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக