Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 31 ஆகஸ்ட், 2019

செவ்வாய் தோஷ பரிகாரங்கள் :

 Image result for செவ்வாய் தோஷ பரிகாரங்கள் :
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



 செவ்வாய் கிழமைகளில் முருகன் மற்றும் முருகனின் அம்சம் கொண்ட அங்காரகனையும் வழிபட்டு வந்தால் செவ்வாயின் தாக்கம் குறையும்.

 விநாயகருக்கு செவ்வாய் கிழமை வரும் சதுர்த்தி நாளில் அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருந்தால் நல்லது நடைபெறும். இவ்வாறு 41 செவ்வாய்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும்.

 செவ்வாய்க்கிழமையில் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் துவரை தானம் செய்யதால் செவ்வாயின் தாக்கம் குறையும்.

 செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வய் காயத்ரீ மந்திரம், தியான மந்திரம், சூரிய கவசம் போன்றவற்றை கடவுளை மனமுருகி வழிபட்டு சொல்லி வந்தால் தோஷம் விலகும்.

 செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை மோதிர விரலில் வலது கரத்தில் அணியலாம்.

 முருகனுக்கு சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தோஷம் விரைவில் நீங்கிவிடும்.

 நவகிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு 27 செவ்வாய் கிழமைகள் நெய்விளக்குபோட்டு வந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.

 நவகிரக செவ்வாய்க்கு பிறந்ததேதி அல்லது கிழமைகளில் அர்ச்சனைச் செய்வதால் நன்மை உண்டாகும். இதுபோன்ற பரிகாரங்கள் செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள் :

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சிறப்பு வாய்ந்த பரிகார ஸ்தலாமக் அமைகின்றது.

மேலும்

 சுப்ரமணியசுவாமி, சென்னிமலை, ஈரோடு.

 சங்கமேஸ்வரர், பவானி, ஈரோடு.

 கந்தசுவாமி, திருப்போரூர், காஞ்சிபுரம்.

 மலையாள தேவி துர்காபகவதி அம்மன், நவகரை, கோயம்புத்தூர்.

 அமிர்தகடேஸ்வரர், மேலக்கடம்பூர், கடலூர்.

 அருணஜடேசுவரர், திருப்பனந்தாள், தஞ்சாவூர்.

 கைலாசநாதர், கோடகநல்லூர், திருநெல்வேலி.

 வீரபத்திரர், அனுமந்தபுரம், காஞ்சிபுரம்.

 கல்யாண கந்தசுவாமி, மடிப்பாக்கம், சென்னை.

 அகஸ்தீஸ்வரர், வில்லிவாக்கம், சென்னை.

 தேனுபுரீஸ்வரர், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்.

 அகோர வீரபத்திரர், வீராவாடி, திருவாரூர்.

 பிரளயநாதசுவாமி, சோழவந்தான், மதுரை.

 விருத்தபுரீஸ்வரர், திருப்புனவாசல், புதுக்கோட்டை.

சுப்பிரமணியர் காங்கேயன், காங்கேயநல்லூர், வேலூர்.

போன்ற கோவில்களுக்கு சென்று வழிபட்டும் வளம் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக